Published : 21 Mar 2015 09:41 AM
Last Updated : 21 Mar 2015 09:41 AM

அங்கன்வாடி காலிப்பணியிடங்கள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அங்கன்வாடி காலிப்பணியிடங் களில் 3 ஆயிரம் இடத்தை காலி யாக வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத் தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட் டது. அந்த மனுவில், “வயது வரம்பு, வருமானம், இருப்பிடத்தின் தொலைவு ஆகியவற்றை வலியுறுத் தாமல், எங்கள் சங்கத்தினருக்கு பதவி உயர்வு அளித்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், இவ்வழக்கு முடியும் வரை அங்கன்வாடி பணியாளர் காலியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும்” என்று கூறப் பட்டிருந்தது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றமும் அண்மையில் தடை விதித்தது.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி சசிதரன் முன்பு இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட (ஐசிடிஎஸ்) ஆணையர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அரசு வழக்கறிஞர் சுப்பையா ஆஜராகி வாதிடும்போது, “மொத்த முள்ள 17,150 அங்கன்வாடி பணி யாளர் காலியிடங்களில், இவ் வழக்கு முடியும் வரை 3 ஆயிரம் இடங்களை காலியாக வைத்திருக் கிறோம். மீதமுள்ள காலிப்பணி யிடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர் களின் வயது, வருமானம், இருப்பிடத்தின் தொலைவு ஆகிய நிபந்தனைகளை தளர்த்தி அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது” என்றார்.s

இதையடுத்து நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவில், “அங்கன் வாடி பணியாளர் காலிப்பணியிடங் களில் 3 ஆயிரம் பணியிடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். தேர்வு நடவடிக்கையில் மனுதாரர் சங்கத்தினர் கலந்துகொள்ளலாம். வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 20-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x