Published : 29 Mar 2015 12:06 PM
Last Updated : 29 Mar 2015 12:06 PM

மாணவன் செலுத்திய கட்டணத்தை திருப்பி தரவேண்டும்: தனியார் மேலாண்மை பள்ளிக்கு சென்னை நுகர்வோர் மன்றம் உத்தரவு

எம்பிஏ படிப்புக்கு மாணவர் செலுத்திய கட்டணத்தை திருப்பி தரவேண்டும் என்று தனியார் மேலாண்மை பள்ளிக்கு சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப் பேட்டையே சேர்ந்தவர் தினேஷ் பாபு. இவர் ஐஐகேஎம் என்ற தனியார் மேலாண்மை பள்ளிக்கு எதிராக சென்னை(தெற்கு) நுகர்வோர் மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் கடந்த 2012-13-ம் கல்வியாண்டில் எம்பிஏ படிக்க ஐஐகேஎம் மேலாண்மை பள்ளியில் விண்ணப்பித்தேன். அதற்கு பதிவுத்தொகையாக ரூபாய் ஆயிரம் செலுத்தினேன். பதிவுத்தொகை செலுத்திய இரண்டு நாட்களில் பள்ளி நிர்வாகத்தினர் என்னிடம் எம்பிஏ படிப்புக்கு ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்துமாறு கூறினார்கள். அதன்படி அந்த தொகையும் செலுத்தினேன்.

என்னுடைய விண்ணப்பத்தில் இளநிலை சான்றிதழ் இணைக் கப்படாமல் இருந்தது. அதனை உடனடியாக இணைக்குமாறு அவர்கள் கூறினர்.

ஆனால் என்னால் இளநிலை சான்றிதழை உடனடியாக சமர்ப் பிக்க முடியவில்லை. இதனால் நான் எம்பிஏ படிப்பை நிறுத்த வேண்டி வந்தது. இதனால் அவர்களிடம் நான் செலுத்திய ரூ.25 ஆயிரத்தை திருப்பி கேட்டேன்.

ஆனால் அவர்கள் நான் செலுத்திய ரூ.25 ஆயிரம் பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு எம்பிஏ படிப்புக்கு கட்டணமாக செலுத்தப்பட்டு விட்டது என்ற னர். இதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இளநிலை சான்றிதழ் இல்லாமல் அவர்கள் எப்படி கட்டணம் செலுத்தியிருக்க முடியும்?

நான் செலுத்திய ரூ.25 ஆயிரம் மற்றும் மன உளைச்சலுக்கு ரூ.70 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.1000 ஆகிய தொகையை ஐஐகேஎம் நிர்வாகத்தினர் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகார் தொடர்பாக ஐஐகேஎம் மேலாண்மை பள்ளி அளித்த பதிலில் கூறியிருந்ததாவது:

புகார்தாரர் செலுத்திய தொகையை மீண்டும் வழங்க முடியாது என பாடத்திட்டத்தின் தகவல் ஏட்டில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் அவர் இளநிலை சான்றிதழ் கொண்டு வந்து தருவதாக கூறியதன் அடிப்படை யில் அவருக்கு எம்பிஏ படிப் பில் சேர தற்காலிக அனுமதி வழங்கி இருந்தோம்.

அதனால் எம்பிஏ கட்டண தொகையான ரூ.25 ஆயிரத்தை பாரதியார் பல்கலைக்கழகத்தில் செலுத்தினோம். ஆனால் அவர் இளநிலை சான்றிதழ் கிடைக்க வில்லை என தெரிவித்தார். அதனால் தன்னை எம்பிஏ படிப்பில் இருந்து நீக்கிவிடுமாறு கூறினார். அப்போது படிப்பில் இருந்து நீக்கிவிட்டாலும் அதற்காக செலுத் தப்பட்ட தொகையை வழங்க முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட் டிருந்தது.

இந்த வழக்கை சென்னை (தெற்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் பி.ராமலிங்கம், உறுப்பினர் கே. அமலா ஆகியோர் விசாரித்தனர். இது தொடர்பான உத்தரவை வழங்கும் முன்பு பல்கலைக்கழக மானிய குழுவின் பொது அறிவிப்பு ஒன்றை அவர்கள் சுட்டிக்காட்டினர். அதில் மாணவர் ஒருவர் ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்தி படிப்பை தொடரமுடியாமல் இருந்தால் அதனை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டி ருந்தது.

இதன் அடிப்படையில் ஐஐகேஎம் நிறுவனம் மாணவர் தினேஷ் செலுத்திய ரூ.25 ஆயிரம் ரூபாயில் ரூ.1000 மட்டும் நிர்வாகத்தினர் பரிசீலனை தொகையாக எடுத்து கொள்ளலாம்.

கட்டணத்தில் மீதமுள்ள தொகை யான ரூ. 24 ஆயிரம் மற்றும் வழக்கு செலவாக ரூ.5 ஆயிரத்தை ஐஐகேஎம் நிர்வாகத்தினர் வழங்க வேண்டும்” என உத்தர விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x