Published : 22 Feb 2015 07:35 PM
Last Updated : 22 Feb 2015 07:35 PM

பட்ஜெட் தொடர் சுமுகமாக நடக்க உதவுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடந்திட எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்கிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை அழைத்து நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

மோடி கூறியதாவது:

"நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் பொன்னான நேரம் வீண் போகக்கூடாது. இந்த நேரத்தை முழுமையாக பயன்படுத்தி மக்களின் நன்மையை கருத்தில்கொள்ளவேண்டும். இதை கட்சிகளின் தலைவர்கள் கருத்தில்கொள்வது அவசியம். அப்போதுதான் மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்களை நம்மால் நிறைவேற்ற இயலும்.

எனவே எல்லா கட்சிகளின் தலைவர்களுக்கும்உடைய பொறுப்பு இது. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம், முன்னுரிமை கொடுத்து போதிய வகையில் விவாதிக்கப்படும்” என்றார் மோடி.

சோனியா காந்தியுடன் வெங்கய்ய நாயுடு சந்திப்பு

முன்னதாக, நேசக்கரம் நீட்டும் வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்து நாடாளுமன்றம் சுமுகமாக செயல்பட்டு பணிகளை நிறைவேற்ற ஒத்துழைக்கும்படி கோரிக்கை விடுத்தாள் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு.

எனினும் எதிர்க்கட்சிகள் அரசின் சமரச முயற்சிக்கு செவிசாய்ப்பதாக தெரியவில்லை. நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட தயாராக இருப்பதை அவை தெளிவுபடுத்தி உள்ளன.

மக்களுக்கு உதவாத மசோதாக்கள், அவசர சட்டங்களுக்கு காங்கிரஸ் ஆதரவு தராது என மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துவிட்டார்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது இருந்ததைவிட பலவகைகளில் மோசமானது என்ற அளவுக்கு தற்போதைய அரசு நில சட்டத்தை மாற்றுகிறது. இதை எதிர்த்துப்போராடுவோம் என்று தெரிவித்திருக்கிறார் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ்.

நில அவசர சட்டத்தை புதிய சட்டமாக மாற்றும் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு உட்படுத்த மாறுதல்கள் பற்றி பரிசீலிக்கவண்டும் என தெரிவித்துளஅளார் இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா.

எனினும், எந்த பிரச்சினையாலும் கருத்து வேறுபாடுகளை தீர்க்க எதிர்க்கட்சிகளுன் கூடி பேசி தீர்வு காண அரசு தயார் என்று கூறி இருக்கிறார் வெங்கய்ய நாயுடு. வெளிப்படையாக பேசினால் தீர்க்கமுடியாத பிரச்சினைகளே இல்லை என்றும் அவர் கூறி இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x