Published : 07 Feb 2015 02:20 PM
Last Updated : 07 Feb 2015 02:20 PM

டெல்லியில் பிற்பகல் 1 மணி வரை 35% வாக்குப்பதிவு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நேர நிலவரப்படி, 35.82 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் காலை 8 மணியளவில் தொடங்கியது. பகல் 1 மணி நேர நிலவரப்படி 35.82 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாவட்டம் வாரியாக வட கிழக்கு டெல்லியில் 38.62 சதவீதமும், வட மேற்கு டெல்லியில் 37.14 சதவீதமும், தெற்கு டெல்லியில் 35.08 சதவீதமும், தென் மேற்கு டெல்லியில் 37.30 சதவீதமும், தென் கிழக்கு டெல்லியில் 35.84 சதவீதமும், மத்திய டெல்லியில் 32.3 சதவீதமும், கிழக்கு டெல்லியில் 37.41 சதவீதமும், மத்திய டெல்லியில் 32.78 சதவீத வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

முதல் 5 மணி நேரத்தில் 35 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகி இருப்பது, மிதமான நிலையையே காட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x