Published : 02 Feb 2015 09:18 PM
Last Updated : 02 Feb 2015 09:18 PM

மார்ச் 27-ல் சிம்புவின் வாலு ரிலீஸ்

சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள 'வாலு' திரைப்படம் மார்ச் 27-ல் ரிலீஸ் ஆகிறது. இதை இயக்குநர் விஜய் சந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம், 'ஆடுகளம்' நரேன், மந்த்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இப்படத்தைத் தயாரித்துள்ளார். ஷக்தி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக 'வாலு' படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போகிறது. இறுதியாக சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3-ல் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், மார்ச் 27-ல் 'வாலு' படம் ரிலீஸ் ஆகும் என்று விஜய் சந்தர் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளிவரும் படம் என்பதால் 'வாலு' படத்துக்கு கணிசமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு படம்' ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x