Published : 18 Feb 2015 10:49 AM
Last Updated : 18 Feb 2015 10:49 AM

வில்லனாக நடிக்கத் தயார்: புதிய பாதையில் கார்த்திக்

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரீ - என்ட்ரி ஆகியிருக்கிறார் நவரச நாயகன் கார்த்திக். ‘அனேகன்’ படத்தில் இவரது வித்தியாசமான கதாபாத்திரம் சினிமா வட்டாரத்தைப் பேசவைத்திருக்கிறது. இந்த வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கும் கார்த்திக்கை சந்தித்தோம்.

‘அனேகன்’ படத்துக்கு ரசிகர்களி டையே எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது?

படம் நல்லா போயிட்டு இருக்கு. ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் படத்தை பாராட்டி பதிவுகள் வந்து குவிஞ்சுட்டே இருக்கு. தனிப்பட்ட முறையில் வில்லனா நடிக்க வேண்டாம்னு சிலரும், இப்படியே தொடர்ந்து நடிக்கலாம்னு பலரும் அறிவுரை சொல்லிட்டு இருக்காங்க.

இந் தப் படத்தோட ஒட்டுமொத்த யூனிட்டும் கடுமையா உழைச்சு இந்தப் பாராட்டை பெற்றிருக் காங்க. மொத்தத்துல மீண்டும் எனக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைச்சிருக்கு.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் சினிமா உலகின் தொடர்பு இல் லாம இருந்துட்டு மீண்டும் நடிக்க வந்த அனுபவம் எப்படி இருந்தது?

சினிமாவை மட்டுமே பார்த் துட்டு இருந்த நான் நாட்டு நடப்பையும் தெரிஞ்சுக்கிறதுக் காக அரசியலுக்குப் போக வேண் டியதாப் போச்சு. அரசியல் களம் எனக்கு கலவையான பல அனு பவங்களைத் தந்திருக்கு. ஒரு மாற்றம் வேணும்னுதான் திரும் பவும் நடிக்க வந்தேன்.

ஹீரோவா நடிச்சுட்டு இருந்த காலத்துல வித்தியாசமான பாத்திரங்களைச் செய்ய விரும்பினேன். ஆனா அதுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கல.

‘கோகுலத்தில் சீதை’, ‘வண்ணக் கனவுகள்’, ‘மௌன ராகம்’னு ஒருசில படங்கள் தான் அப்படி அமைஞ்சுது. ‘கோகுலத்தில் சீதை’ படத்துல கிட்டத்தட்ட வில்லன் கதாபாத் திரம்தான்.

கம்பி மேல நடக்குற மாதிரி அந்தக் கதாபாத்திரத்தை பண்ணியிருந்தேன். ‘அனேகன்’ படத்திலும் கிட்டத்தட்ட அப்படித் தான்; வில்லன் மாதிரியான ஒரு கதாபாத்திரம். கதை பிடிச் சிருந்ததால நடிக்க சம்மதிச்சேன்.

‘அனேகனி’ல் வித்தியாசமான வேடத்தை எடுத்திருந்தாலும் உங்கள் வழக்கமான நடிப்பு பாணியை மாற்றிக் கொள்ள வில்லையே?

படத்தில் கார்த்திக்தான் வில் லன் என்பது கடைசிவரை ரசிகர் களுக்கு தெரியக் கூடாது. அந்த சஸ்பென்ஸை பாதுகாக்க என் வழக்கமான பாணியை கடைசி கட்டம் வரை பின்பற்றினேன்.

வாய்ப்புக் கிடைத்தால் தொடர்ந்து எதிர்மறை பாத்திரங்களில் நடிப் பீர்களா?

வாய்ப்புகள் வந்தாலா..? வந்துக்கிட்டே இருக்கு. இதோ.. இப்பக் கூட ஒரு இயக்குநரிடம் கதை கேட்கத்தான் போயிட்டு இருக்கேன். கதை நல்லா இருந்தா கண்டிப்பா நடிப்பேன்.

ஹீரோவா இருந்தப்ப பண்ண முடியாத வேடங்கள் இப்ப நிறைய கிடைக்குது. எனக்கும் நிறைய வேடங்களில் நடிக் கணும் போல இருக்கு. ஹீரோங்கிற பந்தா இல்லாம இப்ப எல்லா கேரக்டர்களும் பண்ணிப் பார்த்துடணும்னு முடிவோட கிளம்பிட்டேன்.

சத்தான கதையாக இருந்தால் வில்லனாகவும் நடிக்கத் தயார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x