Published : 16 Feb 2015 06:09 PM
Last Updated : 16 Feb 2015 06:09 PM

பிப்.19-ல் ஜி.வி.பிரகாஷின் பென்சில் இசை, டீஸர் வெளியீடு

ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிக்கும் 'பென்சில்' திரைப்படத்தின் இசை வெளியீடு பிப்ரவரி 19ல் நடைபெறுகிறது.

அறிமுக இயக்குநர் மணி நாகராஜ் இயக்கும் படம் 'பென்சில்'. ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிக்கும் இப்படத்தில் ஊர்வசி, டி.பி.கஜேந்திரன்,விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு வேலைகளை கவனித்துக் கொள்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமான முதல் படம் 'பென்சில்'தான். அதற்குப் பிறகே, 'டார்லிங்', 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' ஆகிய இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

இவற்றில், 'டார்லிங்' படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், 'பென்சில்' படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு பிப்ரவரி 19ல் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x