Published : 13 Feb 2015 06:41 PM
Last Updated : 13 Feb 2015 06:41 PM

சூர்யாவுக்கு மீண்டும் ஜோடியாகிறார் சமந்தா

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் '24' படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கத்தில் '24' என்று பெயரிடப்பட்டு இருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கும் இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலமாக தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தின் பாடல் பதிவு உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருந்தாலும், நாயகி யார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. தற்போது படத்தின் நாயகியாக சமந்தாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

'அஞ்சான்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா இப்படத்தில் ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x