Published : 21 Feb 2015 11:13 AM
Last Updated : 21 Feb 2015 11:13 AM

உணவுக்குப் பயன்படாத எண்ணெயில் இருந்து பயோ-டீசல்

சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் வாகனங்களை இயக்குவதற்கு பயோ-டீசல் உற்பத்தி செய்ய அரசிடம் செயற்குறிப்பு உள்ளதா என்று அதிமுக உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான் கேள்வி எழுப்பினார்.

அதற்கு வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி பதில் அளிக்கையில், “உணவுக்குப் பயன்படாத எண்ணெயில் இருந்து பயோ-டீசல் உற்பத்தி செய்வது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மத்திய அரசு திட்ட முகமையுடன் இணைந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. காட்டாமணக்கு, புங்கம், புன்னை, வேம்பு, இலுப்பை போன்றவற்றில் இருந்து கிடைக்கும் தாவர எண்ணெய் பயோ-டீசலாக மாற்றப்படுகிறது. இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால், நாட்டின் அந்நிய செலாவணி பெருமளவு மிச்சமாகும்” என்றார் அமைச்சர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x