Published : 03 Feb 2015 09:39 AM
Last Updated : 03 Feb 2015 09:39 AM

வாக்கு சேகரிப்புக்கு 9 நாட்களே உள்ளன: ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரச்சாரம் விறுவிறுப்பு

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய் வதற்கு 9 நாட்களே உள்ள நிலை யில், 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தும் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய அரசியல் கட்சிகள் மட்டுமே விறுவிறுப்புடன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

அதிமுக வேட்பாளராக எஸ்.வளர்மதி தொகுதி முழுவதும் சுற்றி வாக்கு சேகரித்து வருகி றார். அமைச்சர்கள், மாவட்டச் செய லர்கள் அடங்கிய கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அவர வருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் அலுவலகங்களை திறந்து, வீடுகள்தோறும் சென்று தினமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின் றனர். ஒரு லட்சம் வாக்குகள் வித்தி யாசத்தில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதே தங்க ளது இலக்கு என்கின்றனர் அதிமுகவினர்.

திமுக ஆரவாரமின்றி பிரச்சாரம்

தொகுதி முழுவதும் பிரச் சாரத்தை முடித்துள்ள திமுக வேட்பாளர் என்.ஆனந்த், தற்போது விடுபட்ட இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். கடந்த திமுக ஆட்சியில் செய்த திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளை பட்டியலிடும் திமுகவினர், அதிமுக ஆட்சியில் செய்யாமல் விடுபட்டி ருக்கும் பணிகளைச் சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்கின்றனர். முன்னாள் அமைச்சர் நேரு, கிராமங்களுக்குச் செல்லும்போது மக்களோடு மக்க ளாக அவர்களுக்கு புரியும்படி தமிழ், தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்து வருகிறார். திமுக தரப்பில் துரைமுருகன், கனி மொழி எம்.பி. பிரச்சாரம் செய்ய உள்ளனர். பிப். 7, 8, 9, 10 தேதி களில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

நடந்து சென்று வாக்கு சேகரிப்பு

பாஜக வேட்பாளர் எம்.சுப்ரமணி யம், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கிராமப் புறங்களில் தெருக்களில் நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டுள் ளார். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, இல.கணேசன், நடிகர் நெப் போலியன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இறுதிக்கட்ட பிரச்சாரத் தில் ஈடுபடவுள்ளது தங்களுக்கு வலுசேர்க்கும் என நம்புகிறது பாஜக தரப்பு.

வழக்கமான பாணியில்..

ஆடம்பரமில்லாமல் கலைக் குழுக்கள், ஆட்டோ மூலம் பிரச் சாரம், வீடுகள்தோறும் சென்று ஆதரவு திரட்டுவது, துண்டுப் பிர சுரங்கள் விநியோகித்தல், வேன் மூலம் பிரச்சாரம் என்று பொதுவுட மைக் கட்சிகளின் வழக்கமான பாணியில் பிரச்சாரம் செய்துவரு கிறார் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.அண்ணாதுரை. அவருக்காக டி.கே.ரங்கராஜன் எம்.பி. தனது பிரச்சாரத்தை தொடங்கி யுள்ளார். 5-ம் தேதி சவுந்தரராஜன் எம்.எல்.ஏ., 7-ம் தேதி லாசர் எம்.எல்.ஏ., 8-ம் தேதி மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், பிப்.9,10 தேதிகளில் உ.வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன், தமிழருவி மணியன் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

டிராபிக் ராமசாமி

பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 4 வேட்பாளர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 3 வேட்பாளர்கள் தவிர, 22 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இவர்க ளில் டிராபிக் ராமசாமி கடந்த இரு தினங்களாக தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இவரைத் தவிர மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் பிரச்சாரக் களத்தில் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x