Last Updated : 11 Feb, 2015 02:39 PM

 

Published : 11 Feb 2015 02:39 PM
Last Updated : 11 Feb 2015 02:39 PM

ஐ வரவேற்பு: படங்களை அடுக்கும் விக்ரம்!

'10 எண்றதுக்குள்ள' தொடர்ந்து ஆனந்த் ஷங்கர், கெளதம் மேனன் இயக்கும் படங்களில் நடிக்க விக்ரம் முடிவு செய்திருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'ஐ' தொடர்ந்து, விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் '10 எண்றதுக்குள்ள' வெளிவரவிருக்கிறது. சமந்தா நாயகியாக நடித்திருக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்து இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஃபாக்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மே 29-ம் தேதி வெளியிட தீர்மானித்து இருக்கிறது.

அப்படத்தைத் தொடர்ந்து 'அரிமா நம்பி' இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம். இப்படத்தை தாணு தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் நடிப்பில் கைவிடப்பட்ட 'கரிகாலன்' படத்துக்கு கொடுக்கப்பட்ட தேதிகளை இப்படத்தின் மூலம் சரிசெய்ய திட்டமிட்டு இருக்கிறார் விக்ரம். 'கரிகாலன்' தயாரிப்பாளரும், தாணுவும் குடும்ப நண்பர்கள் என்பதால் இம்முடிவை எடுத்திருக்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஐங்கரன் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x