Last Updated : 24 Feb, 2015 01:12 PM

 

Published : 24 Feb 2015 01:12 PM
Last Updated : 24 Feb 2015 01:12 PM

ஆங்கிலத்திலும் அள்ளலாம் 100க்கு 100

ஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில் மதிப்பெண்களை அள்ளும் மாணவர்களில் சிலர்கூட ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்களைப் பெறத் தவறுவார்கள். சிலர் ஆங்கிலம் என்றாலே பெரிதாகப் பயப்படுவார்கள். ஆனால், இது போன்ற பயம் எதுவும் எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலத் தாளுக்குத் தேவையில்லை.

10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் அதிகம் மதிப்பெண்களைப் பெற விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் எஸ். திலீப் வழிகாட்டுகிறார்:

முதல் தாள்

பகுதி ஒன்றில் 20 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படும். அதில் முதலில் Vocabulary பிரிவில் Synonyms ஐந்துக்கு ஐந்து எடுக்கச் சரியான விடையைத் தேர்ந்தெடுங்கள். இரு விடைகள் சரியாக வரும்பட்சத்தில், பத்திக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுங்கள். Antonyms பகுதியிலும் எதிர்ச்சொல்லில் Prefix சேர்ந்தவாறு இரு விடைகளை எதிர்பார்க்கலாம். Reverence X Irreverance என்பதைப் போல.

பிரிவு 2- ல் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் மிகச் சரியாக விடை தெரியும் 10 வினாக்களுக்கு விடை அளியுங்கள். sentence pattern எழுதுகையில் வாக்கியத்தை எழுதிப் பிரிக்கவும். உதாரணமாக,

I shall meet you tomorrow

S V O A

Compound words எழுதுகையில் கேள்வியை எழுதி விடை எழுதுங்கள். உதாரணமாக pen+drive=pendrive

பகுதி 2 (Grammar) 25 மதிப்பெண்களுக்கானது.முதல் பிரிவில் 10 கேள்விகளுக்கும் பதில் எழுத வேண்டும். சாய்ஸ் எதுவும் கிடையாது .

பிரிவு இரண்டில் - 25-வது கேள்விக்கு இரண்டு வாக்கியங்களைக் கொடுத்து ஏதேனும் ஒரு conjunction பயன்படுத்தி இணைக்கச் சொன்னால் and எனும் conjunction பயன்படுத்தி இணைத்தால் சரியாக இருக்கும்.

26வது கேள்வியில் direct speech to indirect அல்லது indirect to direct மாற்றி எழுதும்போது நிறுத்தல்குறிகளைத் தவறில்லாமல் எழுதவும்.

29-வது வினா degrees of comparison கேள்விக்கு உங்களுக்குத் தெளிவாக விடை தெரியும் Adjective-யைத் தேர்ந்தெடுத்து, அதற்கான Degree -யில் எழுதவும். Superlative Degree எளிமையானதாக இருக்கும்.

30-வது கேள்விக்கு நிறுத்தல்குறிகள் பெரும்பாலும் ஐந்தை மாற்றுவது போல இருக்கும். Capital Letter , Quotation Marks, Full stop, Comma அமையும் இடங்களைச் சரியாகத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு ஐந்து மதிப்பெண்கள்.

குறு-நெடு வினாக்கள்

அடுத்த பகுதி 7 குறுகிய வினாக்களுக்கானது. ஏதேனும் ஐந்துக்கு விடை அளிக்கவும். கேள்வியிலிருந்தே பாதி விடையைக் கண்டுபிடித்துவிடலாம். கேள்வி வார்த்தைகளை நீக்கிவிட்டு எழுதினாலே அரை மதிப்பெண் கிடைக்கும்.

நெடுவினா பகுதியில் முதல் மூன்று உரைநடைகளைப் படித்துவிட்டால் இதற்கு விடை அளித்துவிடலாம். அல்லது, அந்தப் பாடத்தில் உங்களுக்குத் தெரிந்த குறுவினாக்களுக்கான விடைகளைத் தொகுத்துப் பத்தியாக எழுதி வைக்கவும்.

39 -வது கேள்வியில் மனப்பாடப் பகுதி எழுதுகையில் பாடலின் தலைப்பு மற்றும் பாடலாசிரியரின் பெயரைத் தவறாமல் எழுத வேண்டும்.

பகுதி 3

Poem Comprehension மற்றும் Poetic Appreciation என இரண்டு பாடல் வரிகளைக் கொடுத்து வினா கேட்கப்படும். விடை தெரியாத பட்சத்தில் வினாவில் உள்ள வார்த்தை உள்ள அந்த பாடல் வரியை விடையாக எழுதவும்.

Poetic Appreciation பகுதியில் Like அல்லது As வார்த்தை வரும் பாடல் வரியாக இருப்பின் அது Simile.

ஒரே எழுத்தில் தொடங்கும் பல வார்த்தைகள் வரும் பாடல் வரியாக இருந்தால் அது Alliteration.

இவை தவிர ஏதேனும் வந்தால் அது Metaphor அல்லது Personafication. அரிதாக Onamatophea அல்லது Oxymoron கேட்கப்படலாம்.

ஒரே மாதிரியான ஓசையுடைய சொற்கள் Rhyming Words. அதைக் கொண்டு Rhyming Scheme-யைக் கண்டுபிடிக்கலாம்.

பகுதி 4

54-வது வினாவுக்குப் பொதுவான ஒரு பத்தியைக் கொடுத்திருப்பார்கள். அதில் ஒளிந்துள்ள விடைகளைக் கண்டுபிடித்துச் சரியாக விடை எழுத வேண்டும்.

52-வது வினா வாக்கியத்தில் உள்ள பிழைகளைக் களைந்து சரியாக எழுதுதல். இதில் பெரும்பாலும் One of the என்று வந்தால், அடுத்து வரும் Noun, Plural ஆக இருக்க வேண்டும். Prefer என்று வந்தால் Than-க்குப் பதில் To போடவும். இவை தவிர, Tense, Articles , Prepositions பிழைகளைக் கண்டறிந்து திருத்தி எழுதவும்.

53-வது வினா படத்தைப் பார்த்து விடையளித்தல். பொதுவாகப் படம் எதைப் பற்றியது? படத்தில் என்னென்ன காட்சிகள் உள்ளன என்பதாக வினாக்கள் அமையும்.

இரண்டாம் தாள்

இந்தக் கேள்வி துணைப்பாடத்திலிருந்து. பெரும்பாலும் முதல் பத்தியை நன்கு படித்துக்கொள்ளவும்.கதாபாத்திரங்களை நன்கு நினைவில் வைத்துக்கொள்ளவும்.

இதுவரை அதிகம் கேட்கப்பட்டுள்ள கேள்விகள்,

1. Sam, 2. The face of Judas Iscariot,3. Swept Away, 4. A Close Encounter, 5. The Summer Flight

அடுத்த பகுதி

வாக்கியங்கள் கொடுக்கப்பட்டு அந்த வாக்கியத்தைச் சொன்னவர் யார் என வினா இருக்கும். இதற்கு ஒவ்வொரு பாடத்திலும் உள்ள கதாபாத்திரங்களை நன்கு படித்தால் விடை அளித்துவிடலாம்.

பொருத்துக பகுதிக்கும் இந்தக் கதாபாத்திரங்கள் பயன்படும். பொருத்துக எழுதுகையில் விடை நேராக அமையுமாறு எழுதவும். வரைபடம் பென்சிலால் வரைந்து, கோடிட்ட இடங்களை நிரப்பி எழுத வேண்டும்.

பகுதி 2-ல்

எட்டாவது வினாவுக்கான விடை Note making. முதலில் கொடுக்கப்பட்டுள்ள பத்தியில் இருந்து முக்கியச் சொற்களையோ, வாக்கியங்களையோ எடுத்து Bullet Points இட்டு எழுத வேண்டும். பின் Rough copy எழுதவும். பின் அதனை வலமிருந்து இடதாக பென்சிலால் அடித்துவிட்டு Fair Copy எழுதவும். பத்திக்கேற்ற தலைப்பைக் கொடுக்கவும்.

அடுத்து உரையாடல் பகுதியில் சொந்தமாக உரையாடல் எழுதும்போது, இரு நபர்களுக்கும் ஐந்து Utterances வருமாறு எழுதவும்.

கடிதம் எழுதும்போது Format கொடுக்கப்பட்டிருப்பதால் Body of the letter முக்கியமாகப் பார்த்து மதிப்பெண்கள் வழங்கப்படும். எனவே Formal, informal பகுதிகளுக்கு ஏற்றவாறு எழுத வேண்டும்.

விளம்பரம் தயாரிக்கும் விடைக்கு பென்சில் மற்றும் கறுப்பு மையைக் கொண்டு இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு வெள்ளைத் தாள்களில் தலைகீழாகத் திருப்பி அழகாக columns பிரித்து ஓவியத் திறனை வெளிப்படுத்தவும்.

Expand the headlines கேள்விக்கு எங்கே , எப்போது நடந்தது என்பதைச் சேர்த்து எழுதி Tense-யை மாற்றி எழுதவும்.

கடைசி கேள்வி

மொழிபெயர்ப்பு அல்லது படத்தைப் பார்த்து வாக்கியம் எழுதுதல். இதில் தமிழில் உள்ளதை ஆங்கிலத்துக்கு மாற்றி எழுதத் தெரிந்தால், அவ்வினாவைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது படத்தைப் பார்த்து பொதுவாக ஏழு முதல் 10 வாக்கியங்களை எழுதவும். தெரியாதபோது கீழே கொடுத்துள்ள பொதுவான வாக்கியங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

I Like this Picture. This Picture is Meaningful. I like to draw this picture. This picture is black and white. This picture is Natural. I get so many Ideas with this picture. There are so many living and non living things in this picture.

இவை அனைத்தையும் மனதில் கொண்டு படிக்க வேண்டும். 'ஆங்கிலம் மிக எளிது' என்னும் மனோதிடமும் வேண்டும். அப்போது தேர்வைச் சிறப்பாக எழுதலாம். ஆங்கிலத்திலும் நூற்றுக்கு நூறு அள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x