Published : 16 Feb 2015 13:23 pm

Updated : 16 Feb 2015 13:23 pm

 

Published : 16 Feb 2015 01:23 PM
Last Updated : 16 Feb 2015 01:23 PM

புத்தக அலமாரி - 16/02/2015

16-02-2015

Title: Motivate to Win | Author: Richard Denny | Publisher: Kogan Page

ஊக்கப்படுத்துவதன் மூலம் எப்படி வெற்றியை நோக்கிச்செல்வது என்பதற்கான செயல்முறை விளக்கங்களுடன் கூடிய புத்தகம் இது. நமது சுய நம்பிக்கை மற்றும் வெற்றிக்கான இலக்கினை நிர்ணயம் செய்தல் ஆகியவற்றின் வாயிலாக எவ்வாறு நம்மை நாமே ஊக்குவிப்பு செய்துகொள்வது என்பதை சொல்வதோடு, தேவையற்ற தோல்வி, பயம், தலைமைப் பண்பு, குழு மற்றும் குடும்பத்திற்கான ஊக்குவிப்பு பற்றியும் இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Title: Motivating at Work | Author: Twyla Dell | Publisher: Viva Books Private Limited

தங்களுடைய பணியில் சிறப்பாக செயல்படவேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பமாக உள்ளது. அப்படி செயல்படவேண்டுமானால், அதற்கான சூழ்நிலை மிகவும் அவசியம். எளிய வழிகளின் மூலம் பணியில் சுணக்கம் ஏற்படுத்தும் தடைகளைக் கண்டறிந்து, அவற்றை நீக்கி, பணியிடத்தை சிறந்ததாக மாற்றுவதற்கான செய்திகளைக்கொண்ட புத்தகம் இது. மேலும், கடினமான பணியாளர்களைக் கையாளுதல், பணியாளர்களின் உணர்வுகளை மதித்தல், செயல்திறன் மேம்பாடு, உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி சொல்லியுள்ளார் ஆசிரியர்.

Title: How to Motivate Every Employee | Author: Anne Bruce | Publisher: McGraw-Hill

ஒரு நிறுவனமோ அல்லது அதன் மேலாளரோ தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களை ஊக்குவிப்பதன் மூலம் நிறுவனத்தின் உற்பத்தி திறனை எவ்வாறு அதிகரிப்பது என்பதற்கான வழிமுறைகளைக்கொண்ட புத்தகம் இது. எளிமையாக உபயோகப்படுத்தும்படியான 24 வெற்றிச் சூத்திரங்களைக் கொடுத்துள்ளார் ஆசிரியர். இவற்றில் அறிவுபூர்வமான செயல்களுக்கான ஊக்கம், புதுமைகளைப் பாராட்டுதல், அதிக செயல்திறனுக்கான உதவி, மனவலிமை, வெகுமதி மற்றும் அங்கீகாரம் போன்ற கோட்பாடுகள் அடங்கும்.

Title: How to be better at… Motivating People | Author: John Allan | Publisher: Kogan Page

மற்றவர்களை ஊக்கப்படுத்தி வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் திறன், ஒவ்வொரு மேலாளருக்கும் தேவையான அடிப்படை தகுதி என்கிறார் ஆசிரியர் ஜான் ஆலன். இதற்கான வழிமுறைகளை தேவையான உதாரணங்களோடு எளிதில் உபயோகப்படுத்தும்படி கொடுத்துள்ளார். மேலும் ஊக்கப்படுத்துவது என்றால் என்ன? அதன் செயல்பாட்டிற்கு தேவையான காரணிகள் எவை? என்பதைபற்றியும் இந்த புத்தகம் பேசுகிறது.



புத்தக அலமாரிபணியாளர்களை உற்சாகப்படுத்துவதுதலைமைப் பண்புஊக்கப்படுத்துதல்

You May Like

More From This Category

More From this Author