Published : 06 Jan 2015 07:35 PM
Last Updated : 06 Jan 2015 07:35 PM

பாத்திரங்கள் கழுவும் வேலையில் இருந்ததை பெருமையாகக் கருதுகிறேன்: ஸ்மிருதி இரானி

15 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை ஹோட்டல் ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலையில் இருந்ததை பெருமையாகவே கருதுகிறேன் என்று மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் மாநில கல்வித்துறை அமைச்சர்களைச் சந்தித்த ஸ்மிருதி இரானி கூறும்போது, “ஒரு பிளம்பரோ, எலெக்ட்ரீசியனோ, மெக்கானிக்கோ வெட்கப்பட வேண்டிய அவசியமேயில்லை. நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் உள்ள ஹோட்டலில் பாத்திரங்கள் கழுவியிருக்கிறேன், அதனை பெருமையாகவே கருதுகிறேன்.

தெரிவு அடிப்படையிலான கடன் திட்டத்தில் தொழில்சார் கல்விப் படிப்புகளை வழங்குவது பற்றி ஸ்மிருதி இரானி பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர் கல்வி செயலர் சத்யநாராயணன் மொஹாண்டி கூறுகையில், “உலகம் இன்று தொழிலாளர்கள் குறைந்து வருவதை எதிர்கொண்டு வருகிறது. இதனால் இந்தியாவிலிருந்து திறமை மிக்க தொழிலாளர்களை உலக நாடுகள் வரவேற்கத் தயாராக உள்ளது. இதற்கு நாம் எப்படி நம்மை தயார் படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம் என்றார்.

கூடுதல் செயலர் அமர்ஜீத் சின்ஹா, அடுத்த கல்வியாண்டில் மாநிலங்களில் 5,000 கல்லூரிகளில் தொழில்சார் படிப்பைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாநில அமைச்சர் உபேந்திரா குஷ்வாஹா கூறுகையில், “நாம் ஆசிரியர்களிடமிருந்து சிறந்த தேவைகளை எதிர்பார்க்கிறோம் ஆனால் அவர்களை வறுமையில் தள்ளுகிறோம். இந்த நிலை நீடித்தால் நமது குறிக்கோள் நிறைவேறாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x