Published : 13 Jan 2015 11:55 AM
Last Updated : 13 Jan 2015 11:55 AM

சத்யம் திரையரங்குகளை வாங்கவில்லை: பிவிஆர் தகவல்

எஸ்.பி.ஐ (SPI) குழுமத்தின் கீழ் அமைந்துள்ள சத்யம் திரையரங்குகளை வாங்குவதாக வந்த செய்திகளை பிவிஆர் நிறுவனம் மறுத்துள்ளது. கடந்த சில நாட்களாக, சென்னை மற்றும் கோவையில் அமைந்துள்ள 40-க்கும் மேற்பட்ட சத்யம் திரையரங்குகளை, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் திரையரங்குகள் அமைத்துள்ள மற்றொரு திரையரங்க நிறுவனமான பிவிஆர் வாங்கப்போவதாக செய்திகள் வெளியாயின.

இதைத் குறித்து பிவிஆர் நிறுவனம் கூறியதாவது:

"தொழில்முறை வளர்ச்சி வாய்ப்புகளை மனதில் வைத்து, தொடர்ந்து பல வியூகங்களை எங்கள் நிறுவனம் வகுத்து வருகிறது. இது குறித்து பலருடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறோம். ஆனால் எஸ் பி ஐ சினிமாஸ் (சத்யம் திரையரங்குகள்) குறித்த எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை யாருடனும் நடத்தப்படவில்லை" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்யம் சினிமாஸ் மேலும் 40-50 திரையரங்குகளை அமைக்க திட்டமிட்டு வருவதால் அதற்கான முதலீட்டினை திரட்ட திட்டமிட்டுவருகிறது. இது பற்றி எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்வரூப் ரெட்டியிடம் கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

ஆங்கிலம்: © பிசினஸ் லைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x