Published : 20 Jan 2015 09:40 AM
Last Updated : 20 Jan 2015 09:40 AM

இந்தியாவில் இயற்கை முறையில் பயோ டீசல் உற்பத்திக்கான திட்டங்கள்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

இந்தியாவில் இயற்கை முறை யில் பயோ டீசல் உற்பத்தி செய் வதற்கான திட்டங்களை ஏற்படுத் தும் திட்டம் உள்ளது என்றார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை அடுத்த நடுவக்கரை கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பயோ டீசல் தொழிற்சாலையை, மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

இந்தியாவில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக ரூ. 6 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. ஆனால், டாலரின் மதிப்பு மாறுபடுவதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே, இந்தியாவில் இயற்கை முறையில் பயோ டீசல் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான திட்டங்களை ஏற்படுத்தும் நோக் கம் உள்ளது.

தற்போது, இந்தியாவில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் இங்கு பயோ டீசல் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. விசாகப்பட்டினத்தில் நாள் ஒன் றுக்கு 1,500 டன் மற்றும் இங்கு 100 டன் வீதம் பயோ டீசல் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டு வருகிறது.

இந்தத் தனியார் நிறுவனத் தினர், கொடூர் கிராமப் பகுதி யில் கடல் பாசிகளை வளர்த்து அதன் மூலம் பயோ டீசல் தயாரிக் கும் முயற்சியில் வெற்றியடைந் துள்ளனர்.

எனவே, நமது நாட்டில் விவசாயத்துக்கு பயன்படுத்தப் படும் பம்பு செட் மற்றும் டிராக்டர்களை பயோ டீசல் கொண்டு இயக்குவற்காகவும் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவ தைத் தடுப்பதற்காகவும் பயோ டீசல் உற்பத்தியை ஏற்படுத்து வது தொடர்பாக எனது தனிப் பட்ட ஆர்வத்தில் இந்தத் தொழிற் சாலைகளை பார்வையிட் டேன் என்றார். அப்போது, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x