Last Updated : 03 Jan, 2015 02:44 PM

 

Published : 03 Jan 2015 02:44 PM
Last Updated : 03 Jan 2015 02:44 PM

பொங்கல் வெளியீடு: இணைகிறதா காக்கி சட்டை, டார்லிங்?

'ஐ' மற்றும் 'ஆம்பள' படத்தோடு பொங்கல் வெளியீட்டில் இணைய 'காக்கி சட்டை' மற்றும் 'டார்லிங்' படங்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்

'ஐ', 'என்னை அறிந்தால்', 'ஆம்பள', 'காக்கி சட்டை' மற்றும் 'கொம்பன்' ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியீடு என்று விளம்பரப்படுத்தினார்கள். இப்படங்களில் முதல் படமாக 'ஐ' படத்திற்கு திரையரங்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

'ஐ' படத்திற்கு அதிகப்படியான திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டன. அதுமட்டுமன்றி அஜித் நடிப்பில் 'என்னை அறிந்தால்' படமும் வெளிவர இருந்ததால் 'காக்கி சட்டை' மற்றும் 'கொம்பன்' ஆகிய படங்கள் பின்வாங்கியது.

இறுதியாக 'என்னை அறிந்தால்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் ஜனவரி 29ம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 'ஐ' மற்றும் 'ஆம்பள' ஆகிய படங்கள் மட்டுமே வெளியாகக்கூடிய சூழ்நிலை உருவானது.

இந்நிலையில் பொங்கல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கிய 'காக்கி சட்டை' சென்சாருக்கு அனுப்பி இருக்கிறார்கள். சென்சார் பணிகள் முடிவடைந்து பொங்கலுக்கு வெளியிடலாம் என்று தீர்மானித்து பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

பொங்கல் வெளியீட்டில் தற்போது புதிதாக ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் 'டார்லிங்' இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை வெளியான விளம்பரங்களில் 'விரைவில் வெளியீடு' என்று விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் மீண்டும் பொங்கல் வெளியீடு குறித்து விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கடும் போட்டி தொடங்கி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x