Published : 11 Jan 2015 12:35 PM
Last Updated : 11 Jan 2015 12:35 PM

பிரான்ஸில் தொடர் தாக்குதல்கள்: பெண் தீவிரவாதியைத் தேடும் வேட்டை தீவிரம்

பிரான்ஸில் தொடர் தாக்குதல் கள் நடத்திய மூன்று தீவிரவாதி களை அந்த நாட்டு போலீஸார் சுற்றிவளைத்து சுட்டுக் கொன் றுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் தொடர்புடைய மேலும் ஒரு பெண் தீவிரவாதியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாரீஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலு வலகத்தில் கடந்த 7-ம் தேதி புகுந்த 2 தீவிரவாதிகள் அதன் ஆசிரியர், 4 கார்ட்டூனிஸ்டுகள் உட்பட 12 பேரை சுட்டுக் கொன்றனர்.

போலீஸ் விசாரணையில் அந்த தீவிரவாதிகள் செரீப் கவுச்சி, சையது கவுச்சி என்பது தெரியவந்தது. சகோதரர்களான அவர்களை போலீஸார் சல்லடை போட்டு தேடி வந்தனர்.

இதனிடையே கடந்த 8-ம் தேதி அமெடி கவ்லி பாலே என்ற தீவிரவாதியும் அவரது மனைவி ஹயாத்தும் இணைந்து பாரீஸில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடி விட்டனர்.

அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களால் அதிர்ச்சி அடைந்த பிரான்ஸ் போலீ ஸார், நான்கு தீவிரவாதிகளையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய செரீப் கவுச்சியும் சையது கவுச்சியும், சார்லஸ் டி கல்லே விமான நிலையத்துக்கு அருகில் உள்ள கிடங்கில் பதுங்கியிருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அந்தப் பகுதியை அதிரடிப் படை போலீஸார் நேற்றுமுன்தினம் சுற்றி வளைத்தனர்.

அதேநேரத்தில் தீவிரவாதி அமெடி கவ்லி பாலே, பாரீஸின் போர்டி டே வின்ஸ்சென்ஸ் பகுதியில் யூதர்கள் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டில் 20 பேரை பணயக் கைதிகளாக பிடித்தார்.

அவருடன் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தியபோது பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமென்றால் தீவிரவாதிகள் செரீப், சையது ஆகியோர் பிரான்ஸில் இருந்து பாதுகாப்பாக தப்பிச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இதனை ஏற்க மறுத்த போலீஸார், அமெடி கவ்லி பாலேவை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் நான்கு பிணைக்கைதிகள் உயிரி ழந்தனர். 16 பேர் பத்திரமாக மீட்கப் பட்டனர்.

செரீப், சையது சுட்டுக் கொலை

இதைத் தொடர்ந்து சார்லஸ் டி கல்லே அருகில் உள்ள குடோனில் பதுங்கியிருந்த செரீபையும் சையதையும் சரண் அடையுமாறு போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் இருவரும் சரண் அடைய மறுத்து துப்பாக்கியால் சுட்டனர். போலீஸார் அதிரடியாக குடோனில் புகுந்து இருவரையும் சுட்டுக் கொன்றனர். அந்த குடோனில் பணியாற்றிய ஊழியர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

பெண் தீவிரவாதி எங்கே?

பிரான்ஸ் தொடர் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 3 தீவிர வாதிகளை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆனால் தீவிரவாதி அமெடி கவ்லி பாலேவின் மனைவி ஹயாத் (26) மட்டும் தப்பிவிட்டார். அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சூப்பர் மார்க்கெட் தாக்குதலின்போது ஹயாத்தும் உடன் இருந்ததாக சந்தேகிக்கப் படுகிறது. அவரும் ஆயுதப் பயிற்சி தீவிரவாதி என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அல்ஜிரீயா நாட்டை பூர்விகமாக கொண்ட ஹயாத், பிரான்ஸில் உள்ள ஒரு கடையில் காசாளராக பணி யாற்றி வந்தார். 2009-ம் ஆண்டில் அமெடி கவ்லி பாலேவை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் பாரீஸின் பாக்னக்ஸ் பகுதியில் வசித்து வந்தனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இருவரும் திடீரென வீட்டை காலி செய்துவிட்டு மாயமாகி விட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக் கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியபோது, ஹயாத் வெளி நாடுகளுக்கு தப்பிச் சென்றிருக்க வாய்ப்பில்லை. அவர் பாரீஸ் நகருக்குள் பதுங்கியிருக்கலாம். விரைவில் அவரை கண்டு பிடித்துவிடுவோம் என்று தெரிவித் துள்ளனர். தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் ஹோலாந்த் தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x