Published : 14 Jan 2015 02:38 PM
Last Updated : 14 Jan 2015 02:38 PM

நதிகள் இணைப்புக்கு முன்னுரிமை தந்து எத்தனை தடைகள் வந்தாலும் களைவோம்: வெங்கய்ய நாயுடு உறுதி

நதிகள் இணைப்புக்கு எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் களைந்து, முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துவோம் என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதி கூறினார்.

இந்தியா தண்ணீர் வாரத்தை யொட்டி டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

நதிகள் இணைப்பு திட்டத்தால் பாதிப்பு வரும் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின் றனர். ஆனால் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு சமாளித்து, முன்னுரிமை கொடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவோம்.

நதிகள் இணைப்புத் திட்டத்தால் கேடுவிளையும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். ஜனநாயகம் என்றால் பல குரல்கள் எழுவது இயற்கை. அதை தடுக்க விரும்பவில்லை. அவற்றுக்கு பதில் உள்ளது. நதிகள் இணைப்பை நிச்சயமாக நிறைவேற்றுவோம். நதிகள் இணைப்பை மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும். அதற்கான சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும்.

நதிகளை இணைத்தால் நீரினம் அழியும் என்றும் நீரியல் ரீதியிலோ, உயிரின வாழ்வியல் அடிப்படையிலோ இது நல்லதல்ல என்றும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

வளர்ந்த நாடுகள் நமக்கு பாடம் எடுக்கின்றன. அறிவுரைகள் வழங்குகின்றன. முதலில் நாம் முன்னேறுவோம். பிறகு அவர்களுக்கு பாடம் எடுக்கச்செல்வோம்.

மழைநீர் சேமிப்பு

மழைநீர் சேமிப்பை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்டாயமாக்குவது பற்றி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. நகராட்சி அமைப்புகளும் மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்க வேண்டும் என நாட்களில் நான் பரிந்துரைக்க உள்ளேன். இதுவும் ஒரு முன்னுரிமை பணியாக கருதப்படவேண்டும். இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் பங்கேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x