

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் செவ்வாய்க்கிழமை ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை:
காலை 10 மணி
The Maneater/France/Natalia Saracco/85’/2012
ஜேசபெல் எனும் இளம் பெண் கவர்ச்சிமிக்க சுதந்திரமாக வாழும் ஆசைகொண்டவள். அவளுடைய செயல்கள் யாரையும் சார்ந்தும் இல்லை. யாருக்கும் கட்டுப்பட்டதும் இல்லை. வாழ்வின் உயரத்தை எட்டும் முயற்சிகளில் இறங்குகிறாள். மற்றவர்களைவிட தன்னையும் அவள் நம்புவதில்லை. நவீன குறிப்பாக இக்காலத்தில் ஒரு மேரி மக்தலேனாவாகவே தன்னைக் கருதிக் கொள்கிறாள். இப்படி ஆன்மிக சிந்தனையில் மூழ்கியிருக்கும் அவள் ஒரு இளம் மதபோதகரைச் சந்திக்கிறாள். பின்னர் அவள் வாழ்வில் எல்லாமும் மாறிவிடுகிறது.
மதியம் 12 மணி
Suzanne/France/Katell Quillevere/94’/2013
சுசானேவின் அம்மா இறக்கும்போது அவளும் அவள் தங்கையும் மிகமிகச் சிறியவர்கள். தனது அம்மாவின் கல்லறைக்கு ஒருநாள் அப்பா அவளை அழைத்துச் சென்று காட்டியது மட்டும் நினைவில் இருக்கிறது. தாயின் அரவணைப்பு இல்லாமல் வளரும் சுசானே சற்று மாறுபட்ட குணாதிசயம் கொண்டவளாக வளர்கிறாள். அப்பாவும் வேறொரு பாதையைத் தேர்ந்தெடுக்க, இரு சிறுமிகளும் தனித்துவிடப்படுகிறார்கள்.
வளர்ப்புத் தந்தையிடம் வளரும் சுசானே அவருக்கு மிகவும் கஷ்டங்கள் தருகிறாள். அதுமட்டுமின்றி, அவனது அம்மாவின் மகனும் மிகவும் கோழைத்தனமாகவே வளர்கிறான். அப்போதிலிருந்தே சுசானேவின் சுபாவங்கள் வெறுப்பைத் தூண்டும்படியாக அமைந்து வரத் துவங்குகிறது.
சுசானேவின் சிறுமி காலகட்டம், 17 வயதுப்பெண்ணாக மற்றும் மத்திய வயது காலம் என பல நிலைகளிலும் அவளின் வாழ்க்கையை இத்திரைப்படம் வரைந்துகாட்டியுள்ளது. கார் விபத்தில் இறந்த தங்கையின் மரணத்தில் அவள் நிறைய பாடம் கற்றுக்கொள்கிறாள் என்றாலும், சின்னச் சின்னத் திருட்டுக்கள் செய்யும் ஒருவனை காதலிக்கிறாள். 17 வயதிலேயே சுசானே ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள்.
கடைசியில் தனது காதலனால் இவளும் சிறைக்கும் போகவேண்டிய சூழல். ஜெயிலிலிருந்தபோது அனைவரைப் பற்றியும் வழக்குரைஞர் மூலமாகவே கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டிய நிலை. சிறையிலிருந்து அவள் வந்ததும் தனது குழந்தையைத் தேடிச் செல்கிறாள். பின்னர் புரட்சிகரமான பெண்ணாகவும் மாறுகிறாள். 39வது கேன்ஸ் திரைப்படவிழாவில் (2014) சிறந்த துணைநடிகைக்கான விருது இப்படத்தின் நாயகிக்கு கிடைத்தது.
மதியம் 3 மணி
Silent Summer/Germany/Nana Neul/89’/2013
பின் 50களில் இருக்கும் சுசானே, உலக அளவில் ஓவியங்களை வாங்கிவிற்கும் ஏஜென்டாக சிறப்பாக வியாபாரம் செய்தவள். திடீரென்று இந்த தொழிலில் சரிவு ஏற்பட்டு, அதனால் அவளது செல்வாக்கும் குறைந்துவிடுகிறது. இதனால் மனம் அமைதி பெற தெற்கு பிரான்ஸில் உள்ள அவளது விடுமுறை ஓய்வு இல்லத்திற்கு வருகிறாள்.
அது ஒரு அற்புதமான மலைவாசஸ்தலம். பல திருப்பங்களைக் கொண்ட அவளது வாழ்க்கை இப்போதுதான் ஒரு அமைதியான நீரோடையாக மாறியுள்ளது. அங்கு தன்னுடைய உறவினர்களையெல்லாம் வரவழைத்து சந்தித்து அகமகிழ்கிறாள். அங்கு அவர்கள் எல்லாம் மனம்விட்டு தங்கள் கடந்தகால, நிகழ்கால ரகசியங்களையெல்லாம்கூட பேசி மகிழ்கின்றனர்.
மாலை 5 மணி
Son of Trauco /Chile/Alan Fischer/93’/2014
சிலி நாட்டில் சிலோயி தீவில் நடக்கும் கதை. ட்ராவ்கோ என்ற பெண்ணின் மகன் எதையும் ஆராய்ந்துபார்க்கும் ஆர்வம் உள்ளவன். அவனது தந்தை என்ன ஆனார் எங்கே போனார் என்பதிலிருந்து உருவான அவனது கேள்விக்கேட்கும் குணம் உலகின் எல்லா விஷயங்களையுமே கேள்விகளால் தேடல்களால் அறியவிரும்பும் தன்மையை உருவாக்கிவிடுகிறது.
கடலைப் பற்றித் தெரிந்துகொள்ள கடலுக்குள் நீந்திச் செல்வான். தீவின் எல்லாதிசைகளிலும் சென்று தனது உலகின் வேறுபகுதிகளைத் தேடுவான். புராணக்கதைகளின் போதாமைகள் மக்களை நிறைய அழுத்திவைத்திருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறான். தொன்மங்கள் புனைகதைகளால் நிறைய பிரச்சினைகள் உருவாவதாக நம்பத் தொடங்குகிறான். புத்திக்கூர்மையுள்ள சிறுவனின் பார்வை வழியே புலப்படும் உலகம் பார்வையாளனுக்கு மிகவும் வினோதமாகக் காட்சியளிக்கிறது.
மாலை 7.15 மணி
Whatever happened to Timi/Hungary/Attila Herczeg /105’/2014
டேனிக்கு ஒரு வருங்கால மனைவி இருக்கிறாள். ஆனால் அவளுக்கு கர்வம் அதிகம். அவனிடம் எப்பொழுதும் சண்டைபோடும் டைமியா அவனுடன் பதினைந்தாவது ரீயூனியன் பள்ளியில் ஒன்றாகப் படித்த பழைய பள்ளித் தோழிதான். அவர்களது இன்னொரு வகுப்புத் தோழனான போபோக்ஸ் அவர்களைச் சந்திக்கிறான்.
டேனியும் டைமியாவும் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டுகிறான். டைமியாவுடன் தான் இருக்க விரும்புகிறான். அதுதான் காரணம். காதல், நகைச்சுவை, அபத்தம் என வளரும் படத்தின் இறுதியில் டேனி வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறிவிடுகிறான்