Published : 31 Dec 2014 09:45 AM
Last Updated : 31 Dec 2014 09:45 AM

104 மருத்துவ உதவி சேவை ஓராண்டில் 7.60 லட்சம் அழைப்புகள்

தமிழக அரசின் 104 மருத்துவ உதவி சேவை, 2013-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. மருத்துவ உதவிகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்காக 104-ஐ மக்கள் தொடர்பு கொள்கின்றனர். 104 சேவை மையத்தில் பணியாற்றும் மருத்துவக் குழுவினர், பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குகின்றனர். இவை தவிர அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்ஸ்கள் பற்றாக்குறை, நோயாளிகள் அவதி, மாத்திரை, மருந்துகள் தட்டுப்பாடு போன்ற புகார்களையும் பதிவு செய்கின்றனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனைகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 104 சேவையை மேம்படுத்துவது தொடர்பான அழைப்புகளும் வருகிறது. 104 மருத்துவ உதவி சேவை தொடங்கி நேற்றுடன் (டிசம்பர் 30) ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதுவரை 104-க்கு 7.60 லட்சம் அழைப்புகள் வந்துள்ளது.

இதுதொடர்பாக104 சேவையை நடத்தி வரும் ஜிவிகே, இஎம்ஆர்ஐ அதிகாரிகள் கூறியதாவது: 104 மருத்துவ உதவி சேவை தொடங்கி ஓர் ஆண்டு முடிந்துள்ளது. இதுவரை 7.60 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன.

இவற்றில் 2.30 லட்சத்திற்கு மேலான அழைப்புகளுக்கு மருத்துவ உதவிகளும், 13 அழைப்பு களுக்கு மனநலம் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட் டுள்ளன. சேவையை மேம்படுத்துவது தொடர்பாக 5,500 அழைப்புகள் வந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x