Published : 06 Dec 2014 10:59 AM
Last Updated : 06 Dec 2014 10:59 AM

‘ஜன்தன்’ திட்டத்தின் கீழ் 87 சதவீதம் பேர்: வங்கிக் கணக்கு தொடங்கினர்

பிரதம மந்திரியின் ஜன்தன்’ திட்டத்தின்கீழ், தமிழகத்தில் வங்கிக் கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை விரைவில் 100 சதவீதத்தை எட்ட உள்ளது. தற்போது, 87 சதவீதம் பேர் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதம மந்திரி ‘ஜன்தன் யோஜனா’ என்ற திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அறிமுகப்படுத்தினார். தமிழகத்தில் கடந்த நவம்பர் 15-ம் தேதி வரை 87 சதவீதம் பேர் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கை நூறு சதவீதத்தை எட்ட உள்ளது. இதுதொடர்பாக, அண்மையில் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் இவ்விவரம் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் இத்திட்டத்தின்கீழ், 8.39 கோடி பேர் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளனர். இதில் 5.32 கோடி பேர் ரூபே கார்டை பெற்றுள்ளனர். அருணாச்சல பிரதேச மாநிலத்தில்தான் நாட்டிலேயே மிகக் குறைவாக 34 சதவீதம் பேர் மட்டுமே இத்திட்டத்தின்கீழ், வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளனர். மத்திய பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x