Last Updated : 16 Dec, 2014 12:39 PM

 

Published : 16 Dec 2014 12:39 PM
Last Updated : 16 Dec 2014 12:39 PM

பிக் சினிமா திரையரங்குகளை விற்கிறது ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் குழுமத்தின் பிக் சினிமா திரையரங்குகளை வாங்குகிறது கார்னிவால் நிறுவனம். தென்னிந்தியாவை மையமாகக் கொண்ட கார்னிவால் நிறுவனம், அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கேபிடல் குழுமத்தின் பிக் சினிமா திரையரங்குகளை வாங்குகிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் கடன் சுமார் ரூ. 700 கோடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் மீடியா வொர்க்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகளை நடந்திவருகிறது.

தனக்கு சொந்தமான 250 திரையரங்குகளை கார்னிவல் நிறுவனத்துக்கு விற்பனை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பை இரண்டு நிறுவனங்களுமே குறிப்பிடவில்லை. எனினும் மும்பையில் உள்ள ஐமேக்ஸ் வாடலா மல்ட்டி பிளக்ஸ் ரியஸ் எஸ்டேட் அசெட் மட்டும் தனியாக 200 கோடிக்கு விற்க உள்ளதாக தெரிவித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

கார்னிவல் நிறுவனம் இந்திய அளவில் 300 மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகளை நடத்தி வருகிறது. 2017 க்குள் இதை 1,000 திரையரங்குகளாக உயர்த்துவதே எங்கள் இலக்கு என்று கூறினார் கார்னிவல் நிறுவனத்தின் சேர்மன் காந்த் பாஷி. பிக் சினிமாவின் திரையரங்குகளை வாங்குவதன் மூலம் இந்திய அளவில் முன்னணி மல்ட்டிபிளக்ஸ் நிறுவனமாக கார்னிவெல் வளர்ந்துள்ளது என்று கூறினார் பாஷி.

மல்ட்டிபிளக்ஸ் துறையில் நடக்கும் பெரிய விற்பனை இது. ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் துறை சார்ந்த முதலீடுகளில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாகவும், சிறிய முதலீடுகளைத் திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாகவும் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி இந்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. இது தவிர யாத்ரா டாட் காம் நிறுவனத்தின் 16 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அந்நிய முதலீட்டாளர்களிடம் பேசிவருவதாகவும் ரிலையன்ஸ் கூறியுள்ளது. கார்னிவல் நிறுவனம் பிவிஆர், ஐநாக்ஸ் பெயர்களில் மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x