சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் | 21.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் | 21.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை
Updated on
3 min read

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் ஞாயிற்றுக்கிழமை உட்லண்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை.

காலை 10 மணி

Inbetween worlds/Germany/Feo Aladag /98’/2014

ஆப்கானிஸ்தானுக்கு உதவிக்குழுவில் சென்று சேவை செய்யும்போது சகோதரன் கொல்லப்பட்டது தெரியவருகிறது ஜேஸ்பருக்கு. ஜெர்மன் ராணுவத்தைச் சேர்ந்த அவனும் ஆப்கானிஸ்தான் போர்க்களப் பகுதிக்கு அருகில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ராணுவ வேலையாகச் செல்கிறான். தலிபானிலிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமத்தை பாதுகாக்கும் வேலை அவனுக்கு. ராணுவத்தினருக்கும் கிராமத்தினருக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளனாகவும் அந்த மக்களில் ஒருவனாகவும் இருக்கும் தாரிக், ஜேஸ்பருடன் நட்பு பாராட்டுகிறான்.

இரு பக்கமுமே மிகவும் மோசமான நேரம் இதுவென்பதால் இருபிரிவினரின் வாழ்க்கையின் மதிப்பீடுகளின் வேறுபாட்டைக் களைய முற்படுவதோடு, இருவரும் சேர்ந்து கிராமத்தினரின் நம்பிக்கையைப் பெற முயற்சிக்கின்றனர். என்றாலும் அங்கு இருவேறு உலகங்களாக இருக்கிறது யதார்த்தம். தாரிக்குக்கும் அவனது தங்கை நளாவிற்கும் தலிபான்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. அச்சுறுத்தல் மேலும் கடுமையாக, தனது மேலதிகாரிகளின் உத்தரவை மீறி ஜேஸ்பர் அவர்களுக்கு உதவ முற்படுகிறான்.

மதியம் 12 மணி

Like the Wind/Italy/Marco S.Puccioni/97’/2013

இத்தாலியில் முதன்முதலாக சிறைத்துறை கவர்னராக இருந்த அர்மிதா மிசிரேரி என்பவரின் உண்மைக் கதை இது. 15 வயதிலிருந்தே அர்மிதா மிசிரேரியின் வாழ்க்கை இப்படத்தின் திரைக்கதையின் ஊடே சொல்லப்பட்டுள்ளது. உண்மையில் அவள் விரும்பியது ஒரு சாதாரண வாழ்க்கை. ஆனால் கிடைத்ததோ அசாதாரண வாழ்க்கை.

அவளுக்கு என்று இருந்த ஒரு நல்ல வாழ்க்கையும் இழந்துவிடுகிறாள். குற்றங்களை எதிர்ப்பது, கொலைகளைக் கண்டறிவது, நீதிக்காக போராடுவது போலவே அவள் புதிய அன்புக்காகவும் காத்திருக்கிறாள். இப்படத்தில் அற்புதமாக நடித்துள்ள வெலரியோ காலினோவின் கண்களின்வழியே அர்மிதாவின் கனவுகளை நாம் காண்கிறோம்.

2013 ரோம் திரைப்படவிழாவில் சிறந்த நடிகைக்கான விருது, சிறந்த ஐரோப்பிய நடிகைக்கான மற்றும் மனிதநேய விருது, 2014 பேரி உலகத் திரைப்படவிழாவில் சிறந்த நடிகைக்கான / சிறந்த திரைக்கதைக்கான விருது, 2013க்கான காப்ரி ஹாலிவுட் விருது கிடைத்தன.

மதியம் 2.30 மணி

The Circle / Der Kreis / Stefan Haupt / Switzerland / 2014 / 102'

மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட ஆண்களை இணைக்கும் ரகசிய சமூகமாக ‘தி சர்கிள்’ செயல்பட்டு வருகிறது. ‘கே’ என்று அழைக்கப்படும் ஓரினபால் வகையை சேர்ந்த ஆண்கள் கடக்கின்ற கடுமையான அனுபவங்களை நாளிதழாக ரகசியமாக வெளியிட்டு வரும் இந்நிறுவனம் பல ரகசிய வாசகர்களை பெறுகிறது.

இந்த சர்கிள் சமூகத்தில் தயக்கத்துடன் சேரும் எர்ன்ஸ்ட் அங்கு பெண்ணைப் போல் வேடமணிந்து நடனமாடும் ராபியின் மீது காதல் கொள்கிறான். அரசாங்கத்திற்கு இந்த சமூகத்தின் செயல்பாடு பற்றிய உண்மை தெரியவர, பிரச்சினை பிறக்கின்றது. சர்கிள் குழுவில் உள்ள ஆண்கள் தங்கள் அடையாளத்தை முன்னிறுத்த என்ன செய்தார்கள் என்பது தான் இப்படம். 1950களில் இரண்டாம் உலகப் போரிற்கு பின் ஸ்விஸ்ஸர்லாண்டில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் அமையப் பெற்றுள்ளது.

மாலை 4.30 மணி

Nymphomaniac /Denmark/Lars von Tier/117’/2013

சந்துத்தெரு ஒன்றில் ஒரு அப்பார்ட்மென்ட் அருகே, யாரோ ஒருவரால் தாக்கப்பட்டு காயத்தோடு விழுந்துகிடக்கிறாள் ஜோயி. அவ்விளம்பெண்ணை அந்த வீட்டுக்குச் சொந்தக்காரனான செலிக்மேன் பார்த்துவிடுகிறான். உடனே அருகில் சென்று அவளை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று முதல்உதவி செய்து அவளைக் காப்பாற்றுகிறான். இப்படி அவள் யாரிடம் ஏன் எதற்காக அடிவாங்கி விழுந்துகிடக்கிறாள் என்பதை அறிய முற்படுகிறான். அவள் சற்றே ஆசுவாசம் அடைந்தபிறகு தான் கடந்துவந்த பாலியல் நினைவுகளைக் கூற புதிய களங்களில் திரை விரிகிறது.

ஜோய் தனது காதலனுடன் கொண்ட பாலியல் உறவு எவ்வளவு நெருக்கமானது என்றும் ஆனால் அந்த அனுபவங்கள் தந்த சுகத்தை தந்த வேகத்திலேயே கசப்பையும் மோசமாக தந்தது எனபதைப் பற்றியெல்லாம் செலிக்மேனிடம் கூறுகிறாள். இப்படத்தில் இதற்கான பகுதிகளே மிகவும் ஆழமான உளவியல் பதிவாக படம்முழுக்க நிறைகிறது.

பின்னர் பதிலுக்கு செலிக்மேனும் தன் பங்குக்கு தன்னைப் பற்றி கூறுகிறான். தான் ஒரு கடல் மீனைப் போல மேற்பரப்பிலேயே பறந்துபோய்க் கொண்டிருப்பவன் என்றும் இந்த உலகில் தனக்கு மிகவும் விருப்பமானது ஆர்கன் இசைதான் என்றும் கூறுகிறான். மேலும் இதர ரசனை சம்பந்தப்பட்ட உலக விஷயங்கள் பலவற்றை பேசியவவாறு சுவராஸ்யமான உரையாடலை அவன் உருவாக்குகிறான்.

இத்திரைப்படத்தில் அப்பட்டமான செக்ஸ் காட்சிகள் ஒருபக்கம் வெளிப்பட்டாலும் இன்னொரு பக்கம் செலிக்மேன் வாசிக்கும் பாலிபோனிக் இசை இதயத்தை என்றென்றும் வருடிக்கொண்டிருக்கக் கூடியதாகும். பெர்லின் உலகத் திரைப்படவிழாவில் சிறப்புத் திரையிடலாக பங்கேற்றது.

மாலை 7.15 மணி

Nymphomaniac II | Nymphomaniac II Dir.: Lars von Trier Denmark|2013|165'| WC

சென்ற பாகத்தின் தொடர்ச்சியாக, ஜோயி தன் பாலியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறாள். அவள் எப்படி செலிக்மேனின் பார்வைக்கு வர நேர்ந்தது என விவரிக்கிறாள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in