Last Updated : 29 Aug, 2017 05:00 PM

 

Published : 29 Aug 2017 05:00 PM
Last Updated : 29 Aug 2017 05:00 PM

சினிமாவின் கலையம்சம் முக்கியம், பட்ஜெட் அல்ல: நவாஸுதின் சித்திக்

ஒரு கலைஞனாக, தான் நடிக்கும் சினிமாவின் கலையம்சத்தில் அதிக கவனம் இருக்கும் என்றும், பட்ஜெட்டில் இருக்காது என்றும் நடிகர் நவாஸுதின் சித்திக் தெரிவித்துள்ளார்.

பாபுமோஷய் பந்தூக்பாஸ் படத்தின் பட்ஜெட் பற்றி ட்விட்டரில் தகவல் பகிர்ந்த நவாஸுதின் சித்திக், "பாபுமோஷாய்.... படத்தின் பட்ஜெட் பற்றி சிலர் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆம், விளம்பர செலவுகளோடு சேர்த்து ரூ. 5 கோடியில் உருவான படம் இது. ஆனால் என்னைப் பொருத்தவரை, பட்ஜெட் எவ்வளவு இருந்தாலும், அந்த சினிமாவின் கலையம்சம் தான் எனக்கு முக்கியம்" என்று கூறியுள்ளார்.

சென்சார் சர்ச்சையில் சிக்கி வெளியாகியிருக்கும் பாபுமோஷாய் பந்தூக்பாஸ் படம் விமர்சகர்களிடையே போதிய எதிர்பார்ப்பை பெறவில்லை, வசூலிலும் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x