Published : 09 Aug 2017 11:42 AM
Last Updated : 09 Aug 2017 11:42 AM
சிம்பு இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தை, ஹாலிவுட்டிலும் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்.
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. தனது அடுத்த படம் குறித்து, "’கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்...’ 7 முறை வீழ்ந்தாலும் எட்டு முறை எழுந்து நில். விரைவில் தலைப்பு, மற்ற விவரங்கள் வெளியிடப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
மேலும், "பாடல்கள் இல்லை, இடைவேளை இல்லை. பாப்கார்ன், பாத்ரூம் என அனைத்தையும் படத்துக்கு முன்னால் முடித்துவிடுங்கள்.. செப்டம்பர் 2017 வெளியீடு" என்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் சிம்பு.
இப்படம் குறித்தி சிம்பு தரப்பில் விசாரித்த போது, "இந்தப் படம் குறித்து எந்தவொரு தகவலையும் அவர் எங்களிடம் தெரிவிக்கவில்லை. முழுமையாக தனியே உட்கார்ந்து கவனத்துடன் திரைக்கதை அமைத்து வருகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும்.
மேலும், இப்படத்தை ஹாலிவுட்டிலும் வெளியிட சிம்பு திட்டமிட்டு இருப்பது உண்மை தான். ஆனால், அவர் எந்த மாதிரி திட்டமிட்டுள்ளார் என்பதை விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடுவார்" என்று தெரிவித்தார்கள்.
சிம்பு இயக்கி, நடிக்கவுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். யுவன் இசையமைக்கவுள்ளார். எடிட்டிங் பணிகளை ஆண்டனி மேற்கொள்ளவுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT