Last Updated : 27 Mar, 2017 01:12 PM

 

Published : 27 Mar 2017 01:12 PM
Last Updated : 27 Mar 2017 01:12 PM

தொடரும் அஜித் ரசிகர்களின் உறுதுணை: விவேக் ஓபராய் நெகிழ்ச்சி

அஜித் ரசிகர்கள் தொடர்ந்து தனக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், விவேக் ஓபராய் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் 'விவேகம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் டீஸரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

படப்பிடிப்புக்கு இடையே இறுதிகட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், அவ்வப் போது அஜித்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இயக்குநர் சிவா. சமீபத்தில் பனிப்பிரதேசத்துக்கு இடையே அஜித் துப்பாக்கியோடு இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார்.

இப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "அஜித் அண்ணா முன்னெப்போதும் இல்லாத அளவு பார்க்க அட்டகாசமாக இருக்கிறார்." என்று தெரிவித்துள்ளார் விவேக் ஓபராய். மேலும், அஜித் ரசிகர்கள் குறித்து, "தல ரசிகர்கள் எல்லோருக்கும் எனது அன்பும் வணக்கங்களும். உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி." என்று தெரிவித்துள்ளார்.

'விவேகம்' படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்ற, விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x