Last Updated : 07 Aug, 2017 12:17 PM

 

Published : 07 Aug 2017 12:17 PM
Last Updated : 07 Aug 2017 12:17 PM

‘ஷமிதாப்’ தோல்வி பாதித்தது: தனுஷ்

தான் மிகவும் பாதுகாப்பான நடிகன் என்றும், துறையில் ஒருகட்டத்தில் வாய்ப்பு கிடைக்காத நிலைக்கு செல்வதைப் பற்றியெல்லாம் கவலையில்லை என்றும் நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

தனுஷ் தனியார் நிறுவனம் ஒன்றுடன் பேசுகையில், "எனது வேலையைப் பொறுத்தவரையில் இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் மிகவும் பாதுகாப்பான நடிகன். நாளை எனக்கு வாய்ப்பு கிடைக்குமா, கிடைக்காத என்பது பற்றி நான் யோசிப்பதில்லை.

எனக்கு வரவேண்டியது வரும். அதைவிட அதிகமாகவோம், குறைவாகவோ இறைவன் எனக்குத் தர மாட்டார். ஆறடி ஆழத்தில் புதைக்கப்படும்போது என்னுடன் நான் எதையும் எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை.

திரைத்துறையில் போட்டி அவசியமில்லை என நினைக்கிறேன். அதில் அர்த்தமே இல்லை. போட்டிக்கு ஒரு காரணம் தேவை. நமது படம் ஜெயித்தால் நாம் அனைவருமே வெற்றியாளர்கள் தான். ஆனால் என்னுடன் எனக்கு போட்டி இருக்கும், அப்போதுதான் முந்தைய படத்தை விட சிறப்பாக நடிக்க முடியும். என்னால் முடிந்த சிறந்த நடிப்பை, ஒவ்வொருமுறையும் என்னைப் பார்க்க வரும் ரசிகருக்கு நான் தர விரும்புகிறேன்" என்றார்.

‘ஷமிதாப்’ பட தோல்வி குறித்து பேசுகையில், "படம் பெரிய அளவில் வசூலிக்காதது என்னை பாதிக்கவில்லை என்று சொன்னால் அது பொய்யாகிவிடும். அந்த படம் நடித்ததில் எனக்குப் பெருமையே, வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நடிப்பேன். ஒரு நடிகனாக எல்லா முடிவையும் சரியாக எடுக்க முடிந்தால் வசூலிலும் வெற்றி பெறலாம். ஆனால், சில சமயங்களில் சரியாக இருக்கும், சில சமயங்களில் இருக்காது. ஷமிதாப் ஒரு உயர்ந்த திரைப்படம். அதை நினைத்து நான் பெருமையடைகிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x