Last Updated : 15 Mar, 2017 12:34 PM

 

Published : 15 Mar 2017 12:34 PM
Last Updated : 15 Mar 2017 12:34 PM

விவேகம் அப்டேட்: தமிழக உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்ற விநியோகஸ்தர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் பல்கேரியா சென்றுள்ளது படக்குழு.

'விவேகம்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அஜித்துடன் காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

படப்பிடிப்புக்கு இடையே இறுதிகட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் வியாபாரப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. அஜித்தின் 'வேதாளம்' திரைப்படம் தமிழகத்தில் தயாரிப்பாளருக்கு ஷேராக 40 கோடி வந்ததால், 'விவேகம்' படத்தின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையே ரூ.50 கோடிக்கு தொடங்கப்பட்டுள்ளதாக வியாபார பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தவர்கள் தெரிவித்தார்கள்.

ஏப்ரல் 14-ம் தேதி டீஸர் வெளியிட படக்குழு முடிவு செய்து, அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. டீஸர் வெளியீட்டுக்கு முன்பே வியாபாரம் முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x