Last Updated : 17 Aug, 2017 11:46 AM

 

Published : 17 Aug 2017 11:46 AM
Last Updated : 17 Aug 2017 11:46 AM

20 லட்சம் பார்வைகளை கடந்தது விவேகம் ட்ரெய்லர்: தமிழ் திரையுலகினர் மத்தியிலும் வரவேற்பு

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 'விவேகம்' படத்தின் ட்ரெய்லர் நேற்றிரவு (ஆகஸ்ட் 16) வெளியானது. ரசிகர்கள் மற்றும் தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' திரைப்படம் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு கண்டிப்பாக ட்ரெய்லர் வெளியீடு உண்டு என்று இயக்குநர் சிவா அறிவித்ததைத் தொடர்ந்து எப்போது என்ற கேள்வி நிலவி வந்தது.

ஆகஸ்ட் 17-ம் தேதி அதிகாலை 12:01 மணிக்கு 'விவேகம்' ட்ரெய்லர் வெளியாகும் என அறிவித்து, வெளியிட்டது படக்குழு. இந்த ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 12 மணி நேரத்துக்குள் சுமார் 20 லட்சம் பார்வைகளை 'விவேகம்' ட்ரெய்லர் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் பேசியுள்ள "நான் யாரு எங்கிறதை எப்போதுமே நான் முடிவு பண்றதில்லை. என் எதிரில் நிற்பவங்க தான் முடிவு பண்ணுவாங்க. அவங்களுக்கு நான் நண்பனா இல்ல எதிரியானு" மற்றும் "YOU WILL SEE MY RAGE" வசனங்களும், விவேக் ஓபராய் அஜித்தைப் பார்த்து பேசியுள்ள "போராடம அவன் போகமாட்டான், சாகவும் மாட்டான். பீனிக்ஸ் பறவை மாதிரி எரிக்க எரிக்க எழுந்து வர்றான்" என்ற வசனமும் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும், 'விவேகம்' ட்ரெய்லருக்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x