Last Updated : 16 Aug, 2017 12:14 PM

 

Published : 16 Aug 2017 12:14 PM
Last Updated : 16 Aug 2017 12:14 PM

தீபாவளி வெளியீட்டில் மெர்சல் உடன் ஸ்கெட்ச் போட்டி?

தீபாவளி வெளியீட்டில் விஜய்யின் 'மெர்சல்' படத்தோடு விக்ரமின் 'ஸ்கெட்ச்' படமும் வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்று இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகும்படி இயக்குநருக்கு தயாரிப்பு நிறுவனம் அறிவுறுத்தி இருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய் நடித்திருக்கும் 'மெர்சல்' படமும் தீபாவளி வெளியீடு என்று அறிவித்து விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்கியுள்ளது. முன்னதாக,  விஜய் - விக்ரம் இருவரின் படங்களான 'திருமலை' - 'பிதாமகன்', 'சிவகாசி' - 'மஜா' ஆகியவை ஒரே தேதியில் வெளியாகின.

'மெர்சல்' - 'ஸ்கெட்ச்' இரண்டு படங்களுமே தீபாவளிக்கு வெளியானால் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படாது என்பது விநியோகஸ்தர்களின் கருத்தாக இருக்கிறது. 'ஸ்கெட்ச்' படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறைவு பெறுவதைத் தொடர்ந்து தீபாவளி வெளியீடு இறுதிசெய்யப்படவுள்ளது.

ஆகஸ்ட் 20-ம் தேதி 'மெர்சல்' இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தி, விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்க தேனாண்டாள் பிலிம்ஸ் முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x