Last Updated : 13 Aug, 2017 01:15 PM

 

Published : 13 Aug 2017 01:15 PM
Last Updated : 13 Aug 2017 01:15 PM

‘அவெஞ்சர்ஸ் 4’ படப்பிடிப்பு தொடங்கியது

 

‘அவெஞ்சர்ஸ் 4’-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக படத்தின் இயக்குநர்கள் ரூஸோ இணை தெரிவித்துள்ளனர். ‘அவெஞ்சர்ஸ் 4’ படத்தின் ஒரு டீஸர் புகைப்படத்தைப் பகிர்ந்து இதை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளனர்.

மார்வல் சினிமா உலகில் அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் இணைக்கும் படமாக அவெஞ்சர்ஸ் இருக்கிறது. ரசிகர்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பை ‘அவெஞ்சர்ஸ்’ வரிசைப் படங்கள் பெற்றுள்ளன. ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் 3-வது பாகம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது 4-வது பாகமும் படப்பிடிப்புடன் துவங்கப்பட்டுள்ளதாக, படத்தை இயக்கும் ரூஸோ இணை தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜாஷ் ப்ராலின் (தானோஸ்), ஜெரிமி ரென்னெர் (ஹாக் ஐ) ஆகியோர் இத்திரைப்படத்தில் நடிப்பதை இப்போதைக்கு உறுதி செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x