Published : 18 Aug 2017 08:49 AM
Last Updated : 18 Aug 2017 08:49 AM

பிரபல நடிகர் அல்வா வாசு காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 57.

இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக தன்னுடைய திரைவாழ்க்கையில் பயணம் செய்தவ ர் அல்வா வாசு. தமிழில் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவற்றில் அமைதிப்படை, அருணாச்சலம், சிவாஜி ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.

சத்யராஜுடன் பல படங்களில் நடித்துள்ள அல்வா வாசு நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் நடித்த காட்சிகள் மிகவும் பிரபலமானவை.

கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார் வாசு. இந்நிலையில் அவர் கவலைக்கிடமாக இருப்பதால் சிகிச்சை பலனளிக்க வாய்ப்பில்லை என்றும், வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாரும் மருத்துவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் அறிவுறுத்தினர்.

அதன்படி அல்வா வாசுவை அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அல்வா வாசு காலமானார்.

அல்வா வாசுவுக்கு அமுதா வாசுதேவன் என்கிற மனைவியும். கிருஷ்ண ஜெயந்திகா என்கிற மகளும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x