Last Updated : 14 Jul, 2017 12:16 PM

 

Published : 14 Jul 2017 12:16 PM
Last Updated : 14 Jul 2017 12:16 PM

பி.வாசு இயக்கத்தில் காஜல் அகர்வால்

'சிவலிங்கா' படத்தைத் தொடர்ந்து பி.வாசு இயக்கவுள்ள புதிய படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார்.

அஜித்துடன் 'விவேகம்', விஜய்யுடன் 'மெர்சல்' மற்றும் 'க்யூன்' தமிழ் ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். அதனைத் தொடர்ந்து தமிழில் பல்வேறு கதைகளைக் கேட்டு வருகிறார்.

மேலும், 'சிவலிங்கா' படத்தைத் தொடர்ந்து நாயகியை மையப்படுத்திய த்ரில்லர் கதை ஒன்றை எழுதியுள்ளார் பி.வாசு. இதற்காக காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.

காஜல் அகர்வாலும் நடிக்க சம்மதம் தெரிவிக்க, அவரோடு நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x