Last Updated : 25 Jul, 2017 02:58 PM

 

Published : 25 Jul 2017 02:58 PM
Last Updated : 25 Jul 2017 02:58 PM

தமிழகம் மட்டுமின்றி அமெரிக்காவிலும் விக்ரம் வேதா வசூல் சாதனை

தமிழகம் மட்டுமின்றி அமெரிக்காவிலும் 'விக்ரம் வேதா' படம் பெரும் வசூல் சாதனை செய்து வருகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

'விக்ரம் வேதா' திரைப்படம் விமர்சன ரீதியில் மட்டுமன்றி, வசூல் ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் வார வசூல் மட்டுமே சுமார் 10 கோடியை கடந்துள்ளது. சென்னையில் மட்டும் 1.5 கோடியை கடந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமன்றி அமெரிக்காவில் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது 'விக்ரம் வேதா'.

இப்படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட ATMUS எண்டர்டெயின்மண்ட் தங்களுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ”’விக்ரம் வேதா’ அமெரிக்காவில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை சுமார் 1,82,000 டாலர்கள் வசூலித்துள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருமே சனிக்கிழமையே லாபத்துக்கு வந்துவிட்டோம்" என்று தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலெட்சுமி சரத்குமார், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம் வேதா'. சாம் இசையமைத்துள்ள படத்துக்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சஷிகாந்த் தயாரித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x