Last Updated : 13 Jul, 2017 05:46 PM

 

Published : 13 Jul 2017 05:46 PM
Last Updated : 13 Jul 2017 05:46 PM

தெலுங்கில் ரீமேக்காகிறது இவன் தந்திரன்: கண்ணன் இயக்குகிறார்

தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'இவன் தந்திரன்' தெலுங்கிலும் ரீமேக்காகவுள்ளது. கண்ணன் இயக்கவுள்ளார்.

கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'இவன் தந்திரன்'. கண்ணன் மற்றும் ராம்பிரசாத் இணைந்து தயாரித்த இப்படத்தை தனஞ்ஜெயன் வெளியிட்டுள்ளார். ஜூன் 29-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஜிஎஸ்டி வரி போக, தமிழக அரசு நகராட்சி வரியும் சேர்த்திருப்பதால் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் நடத்திய போராட்டத்தால் இப்படத்துக்குப் பாதிப்பு உண்டானது. போராட்டம் முடிவுக்கு வந்தவுடன் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உறுதியாகியுள்ளது. அதனையும் இயக்குநர் கண்ணனே இயக்கவுள்ளார். ரீமேக்கிற்கான நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் தெலுங்கு ரீமேக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x