Last Updated : 05 Nov, 2014 08:33 AM

 

Published : 05 Nov 2014 08:33 AM
Last Updated : 05 Nov 2014 08:33 AM

ஆம் ஆத்மிக்கு 45 தொகுதிகள் கிடைக்கும்: அர்விந்த் கேஜ்ரிவால் நம்பிக்கை

டெல்லியின் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 45 இடங்கள் கிடைக்கும் என அதன் தேசிய அமைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் நிருபர்களுக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுக்கு 45 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். அதன் பின்பு ஆம் ஆத்மி ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடத்தும். இந்தியாவின் முதல் ஊழலற்ற மாநிலமாக டெல்லியை மாற்றுவோம்.

டெல்லியில் பாஜக தவறான முறையில் ஆட்சி அமைக்க முயன்றது முறியடிக்கப்பட் டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையுடன் இருந்ததுதான் காரணம். வரும் தேர்தலில் பாஜகவுடன் நேரடி போட்டி இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

பாஜகவில் முதல்வர் வேட்பாளர் இல்லை கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை போலவே இந்த முறையும் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்தப் போவதில்லை என அக்கட்சியின் மாநிலத் தலைவர் சதீஷ் உபாத்யா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறிய போது, ‘சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க பாஜக எம்.எல்.ஏக்கள் தயாராக உள்ளனர்.

முதல்வர் வேட்பாளரை அறிவிக்க இன்னும் அதிக நேரம் உள்ளது. உரிய நேரத்தில் ஜனநாயக முறையில் முதல்வர் வேட்பாளர் தேர்ந் தெடுக்கப்படுவார்’ எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கருத்து டெல்லி காங்கிரஸின் மூத்த தலைவர் அர்விந்த் சிங் லவ்லி கூறியபோது, ‘கடந்த ஓராண்டாக டெல்லியில் அரசு இல்லை என்பதால், காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான சூழல் எதுவும் இல்லை.

விலைவாசி உயர்வு, வறட்சி, குடிநீர் பிரச்சினை மற்றும் மின்கட்டண உயர்வு என டெல்லிவாசிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து விட்டனர். இது அவர்களை நல்ல முடிவு எடுக்க வைக்கும். காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.

ஆனால் இந்தத் தேர்தலிலும் ‘மோடி அலை’ எனக் கூறி பாஜகவுக்கு வாக்களித்தால் நாட்டையும், டெல்லியையும் கடவுள்தான் காப்பாற்ற வேண் டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x