Published : 07 Nov 2014 09:49 AM
Last Updated : 07 Nov 2014 09:49 AM

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளா?- வீடு வீடாக சென்று சரிபார்க்க தேர்தல் துறையினருக்கு உத்தரவு

வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள பிழைகளை முறைப்படி நீக்குவ தற்கு, வீடு வீடாக பட்டியல் சரி பார்ப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் துறை அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், தவறுகளை சரி செய்து திருத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கான சுருக்கமுறைத் திருத்தப் பணி நடந்து வருகிறது. 10-ம் தேதியுடன் இந்தப் பணிகள் முடிவடைகின்றன. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாகவும், அவற்றைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திமுக மனு

இதுதொடர்பாக திமுக சார்பில் இரு தினங்களுக்கு முன்பு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், ‘வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. குறிப்பாக சில வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ளன.

பலர் ஒன்றுக்கு மேற்பட்ட அடை யாள அட்டைகள் வைத்துள்ளனர். எனவே, வாக்காளர் பட்டியலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் துறை அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் பிழையின்றி திருத்தம் செய்ய உத்தரவிட்டார்.

மாநிலம் முழுவதும் ஆய்வு

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் துறை அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடு வீடாக வாக்காளர் சரிபார்ப்புப் பணி களை மேற்கொள்ள வேண்டும். வீடு மாறியவர்கள், பல ஆண்டு களாக வெளிநாட்டில் இருப்போர், ஆளில்லாத வீடுகள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பெயர் இடம் பெற்றிருப்போர் ஆகியோரைக் கண்டறிந்து, அவர்க ளின் பெயரை பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என கடிதம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x