Published : 07 Jul 2017 08:47 PM
Last Updated : 07 Jul 2017 08:47 PM

நிவின் பாலி - த்ரிஷா இணையும் ஹேய் ஜூடு படப்பிடிப்பு தொடக்கம்

நிவின் பாலி மற்றும் த்ரிஷா இணைந்து நடிக்கும் 'ஹேய் ஜூடு' மலையாள படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

'மோகினி', 'சதுரங்க வேட்டை 2', '96', 'கர்ஜனை' ஆகிய தமிழ் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் த்ரிஷா. இப்படங்களின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

அதனைத் தொடர்ந்து 'ஹேய் ஜூடு' மலையாள படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார் த்ரிஷா. அவர் மலையாளத்தில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். நிவின் பாலி நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை ஷ்யாமா பிரசாத் இயக்கி வருகிறார்.

இதன் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்பூஜையில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x