Published : 10 Jan 2017 21:02 pm

Updated : 16 Jun 2017 11:49 am

 

Published : 10 Jan 2017 09:02 PM
Last Updated : 16 Jun 2017 11:49 AM

சென்னை பட விழா | பெலாஸோ | ஜன.11 | படக்குறிப்புகள்

11

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை (ஜன.11) பெலாஸோ ஸ்கிரீன் 7-ல் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.00 மணி | A DRAGON ARRIVES / EJDEHA VARED MISHAVADI | DIR: MANI HAGHGHI | IRAN | 2016 | 108'


துப்பறியும் பபாக் ஹபிசி என்பவரை ரகசிய போலீஸ் குறுக்கு விசாரணை செய்கிறது. நாட்டின் பிரதம மந்திரி நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 23, 1965க்கு மறுநாளிலிருந்தே அனைத்தும் தொடங்குகிறது. பாரசீக வளைகுடாவின் தொலைதூர தீவில் ஒரு நாடு கடத்தப்பட்ட அரசியல் கைதியின் சந்தேகத்திற்கிடமான தற்கொலை குறித்து புலனாய்வு செய்ய ஹபிசி நியமிக்கப்பட்டார். பாலைவனத்தில் பழங்கால கல்லறை அருகே ஒரு கைவிடப்பட்ட கப்பலில் ஏதோ ஒரு பெரிய மர்மம் இருப்பதுபோல அவருக்குத் தோன்றுகிறது. உள்ளூர் பிணக்குழி தோண்டுபவர் பேய்க் கல்லறையில் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டபோது அப்போது ஏற்பட்ட பூகம்பம் நிகழ்ந்தது பற்றி கூறுகிறார்.

******

பகல் 12,00 மணி GLORY / SLAVA | DIR: KRISHNA GROZEVA | BULGARIA | 2016 | 101'

பல்கேரிய திரைப்படமான இதில் எளிய வாழ்க்கையை வாழும் ரயில்வே ஊழியர் ஒருவர் தணடவாளத்தில் லட்சக்கணக்கான பணம் சிதறிக்கிடப்பதைப் பார்க்கிறார், அதனை முறைப்படி போலீசிடம் ஒப்படைக்கிறார். ஆனால் போக்குவரத்து அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஜூலியா ஸ்டைகோவா ஊழல் வழக்கு ஒன்றைத் திசைத்திருப்ப இவரை பயன்படுத்தத் திட்டமிடுகிறார். இவரது எளிமையான வாழ்க்கை அரச/ஆட்சி அதிகாரத்தின் கோரப்பிடியில் சிக்குகிறது.

******

பிற்பகல் 2.30 மணி FIRE AT SEA / FUCOAMMAARE | DIR: GIANFRANCO ROSI | ITALY | 2016 | 108'

ஐரோப்பிய குடியேற்றப் பிரச்சனையால், இத்தாலியின் லேம்பெடுசா தீவு சந்தித்த நிகழ்வுகளை இந்த ஆவணப்படம் விளக்குகிறது. இத்தாலியில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலையில் தெற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது லேம்பெடுசா தீவு. மத்திய தரைக்கடல் தீவில் பல மாதங்கள் வாழ்ந்து ரோஸி, புலம்பெயரும் மக்கள் வாழ்ந்த வாழ்வை, கலாச்சாரத்தை, வரலாறை, அவர்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி ஆவணப்படம் மூலம் பேசுகிறார். அங்கு வாழும் 12 வயது சிறுவன் சாமுவேலின் பார்வையில் ஆவணப்படம் விரிகிறது.

******

மாலை 4.40 மணி | REVELATIONS | REVELATIONS | DIR: VIJAY JAYAPAL | INDIA | 2016 | 108'

கொல்கத்தாவுக்கு தொலைவில் நகரத்திற்கு வெளியே இக்கதை நடைபெறுகிறது. முக்கியமாக திருமணத்தைப் பற்றி பேசுகிறது. திருமணம் எனும் நிறுவனம் மூலம் பெண்ணின் பாலியல் வாழ்வை ஆண்களால் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை கடுமையாக முன்வைக்கிறது. இத்திரைப்படம் அமைப்புக்கெதிரான போக்கை நம் மனதில் பதிய வைப்பதோடு அதிலிருந்து ஒதுங்கும் உணர்வைத் தரும். ஒரு கட்டத்தில் தனிமை பற்றியும் இப்படம் பேசுகிறது. இத்திரைப்படம் வணிக அடிப்படையிலான எந்த வரையறைக்குள்ளும் அடங்காதது. தமிழ் சினிமாவின் போக்குகளோடு பொருந்திப்போகாததுமாகும். இப்படத்தின் இயக்குநர் எந்த திரைப்படக் கல்லூரியிலும் பயிலவில்லை. எந்த இயக்குநரிடமும் பணியாற்றிய அனுபவமும் கொண்டவரில்லை. கொரிய, மும்பை உலகத் திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ள இத்திரைப்படம் கேரள திரைப்படவிழாவில் பங்கேற்றதோடு இயக்குநர் விஜய் ஜெயகோபால் விருந்தினராகவும் சிறப்பிக்கப்பட இப்படத்தின் உருவாக்கம் ஒரு முக்கிய காரணம்.

******

மாலை 7.00 மணி | SAND STORM / SUFAT CHOL | DIR: ELITE ZEXER | ISRAEL | 2016 | 87'

தெற்கு இஸ்ரேலின் கிராமம் ஒன்றில், ஜலிலா விசித்திரமான விழா ஒன்றை நடத்துகிறாள். தனது கணவனுக்கும், தன்னை விட இளமையான ஒரு பெண்ணுக்கும் நடக்கும் திருமணமே அது. தனக்குள் பொங்கிக் கொண்டிருக்கும் அவனமானத்தை அடக்கிக் கொண்டே வேலைகளை கவனிக்கும் ஜலிலாவுக்கு, தன் மகள் லைலா வேறு இனத்தைச் சேர்ந்த ஒருவனை காதலிப்பதும் தெரியவருகிறது. தனக்கு நேரும் கொடுமையையும், தன் மகளின் செயலையும் அடக்கி மறைத்து வைக்கிறாள் ஜலிலா. ஆனால் கட்டுபாடறற்ற இளம் லைலாவுக்கோ தன் வாழ்க்கை தன் கையில் தான் உள்ளது என நினைக்கத் தோன்றுகிறது.


சென்னை திரைப்பட விழாஉலக சினிமா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author