Last Updated : 03 Jul, 2016 05:05 PM

 

Published : 03 Jul 2016 05:05 PM
Last Updated : 03 Jul 2016 05:05 PM

ஊட்டியில் தொடங்கப்படும் மணிரத்னம் - கார்த்தி படப்பிடிப்பு

ஊட்டியில் பாடல் படப்பிடிப்பு உடன் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் நடிக்கவிருக்கும் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிதி ராவ் நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

'காஷ்மோரா' படப்பிடிப்பு முடிவுற்றதைத் தொடர்ந்து மணிரத்னம் படத்துக்காக தயாராகி வருகிறார் கார்த்தி. இப்படத்திற்காக கார்த்தி விமானி ஆவதற்கான அடிப்படைகளை கற்றுக் கொண்டிருக்கிறார்.

இப்படத்துக்காக மணிரத்னம் - வைரமுத்து - ஏ.ஆர்.ரஹ்மான் இணை 4 பாடல்களை முடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கமாக ஊட்டியில் ஒரு பாடலை படமாக்க இருக்கிறார்கள். இவ்வருட இறுதியில் படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x