Last Updated : 16 Sep, 2016 05:09 PM

 

Published : 16 Sep 2016 05:09 PM
Last Updated : 16 Sep 2016 05:09 PM

ஒப்பம் தமிழ் ரீமேக்: முன்னணி நடிகர்களிடம் பேச்சு

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் 'ஒப்பம்' படத்தை இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யும் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.

மோகன்லான், சமுத்திரக்கனி, அனுஸ்ரீ, விமலா ராமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கியிருக்கும் படம் 'ஒப்பம்'. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு யோகன் இசையமைத்திருக்கிறார். ஒணம் விடுமுறையை கணக்கில் கொண்டு வெளியானது.

இப்படம் வசூல் ரீதியிலும், விமர்சனம் ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தை இந்தியளவில் அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யும் பேச்சுவார்த்தை படக்குழு தொடங்கியிருக்கிறது.

தமிழில் 'ஒப்பம்' படத்தின் ரீமேக்கிற்காக பல்வேறு முன்னணி நாயகர்களிடம் பேசியிருக்கிறார்கள். ஏற்கெனவே இப்படத்தை பிரத்யேகமாக ரஜினி பார்த்திருக்கிறார்.

ஏற்கெனவே மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' படமும் தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x