Last Updated : 20 Mar, 2014 11:51 AM

 

Published : 20 Mar 2014 11:51 AM
Last Updated : 20 Mar 2014 11:51 AM

விரைவில் பாஸ் (எ) பாஸ்கரன் 2

ஆர்யா, நயன்தாரா, சந்தானம் ஆகியோருடன் மீண்டும் இணைந்து 'பாஸ் (எ) பாஸ்கரன்' இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

ஆர்யா, நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடிக்க, ராஜேஷ் இயக்கிய படம் 'பாஸ் (எ) பாஸ்கரன்'. ஆர்யா தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

ராஜேஷ் இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா' போதிய வரவேற்பை பெறவில்லை. இதனால் மீண்டும் ஹிட் கூட்டணியோடு 'பாஸ் (எ) பாஸ்கரன்' இரண்டாம் பாகத்தினை உருவாக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

ஆர்யா தயாரிக்க இருக்கும் இப்படத்தில் பழைய கூட்டணியோடு தற்போது தமன்னாவையும் சேர்க்க திட்டமாம்.

படத்திற்கு என்ன பெயர், இசையமைப்பாளர் யார், ஒளிப்பதிவாளர் யார் என்பது உள்ளிட்ட தகவல்களோடு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x