Last Updated : 24 May, 2017 06:20 PM

 

Published : 24 May 2017 06:20 PM
Last Updated : 24 May 2017 06:20 PM

இப்படை வெல்லும் பர்ஸ்ட் லுக் வெளியீடு

கெளரவ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'இப்படை வெல்லும்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

'சரவணன் இருக்க பயமேன்' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் தளபதி இயக்கத்தில் 'பொதுவாக எம்மனசு தங்கம்' மற்றும் கெளரவ் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி வந்தார் உதயநிதி ஸ்டாலின்.

கெளரவ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் உதயநிதியுடன் நடித்து வந்தார்கள். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.

'இப்படை வெல்லும்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தின் படப்பிடிப்பும் முழுமையாக முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x