Last Updated : 29 Oct, 2013 11:39 AM

 

Published : 29 Oct 2013 11:39 AM
Last Updated : 29 Oct 2013 11:39 AM

ஆல் இன் ஆல் அழகுராஜா உடன் பிரியாணி!

'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்துடன் 'பிரியாணி' படத்தின் டிரெய்லரை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

'பிரியாணி', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார் நடிகர் கார்த்தி. 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தினை இயக்குநர் ராஜேஷ், 'பிரியாணி' படத்தினை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கிவந்தார்கள்.

முதலில் 'பிரியாணி' படத்தினை வெளியிடத்தான் தீர்மானித்தார்கள். ஆனால் படத்தின் வேலைகள் முடியாததால், 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தினை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருந்தார்கள்.

'பிரியாணி' படத்தின் இசை, டீஸர் உள்ளிட்டவை வெளியாகிவிட்டன. ஆனால் படத்தின் டிரெய்லர் வெளியாகவில்லை.

இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாகும் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்துடன் 'பிரியாணி' படத்தின் 2 நிமிட டிரெய்லரை இணைத்து வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'பிரியாணி' படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறார்கள். 'ஜில்லா', 'வீரம்' ஆகிய படங்களோடு 'பிரியாணி' போட்டியிட இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x