Published : 16 Apr 2014 11:16 AM
Last Updated : 16 Apr 2014 11:16 AM

மதுரை காமராஜர் பல்கலைக்கழக முறைகேடுகளை விசாரிக்க உயர்நிலைக் குழு: பொது விசாரணைக் குழு பரிந்துரை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக முறைகேடுகளை விசாரிக்க உயர் நிலைக்குழு அமைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழுவின் பொது விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலை. பிரச்சினைகள் தொடர் பான பொது விசாரணை அப்பல்கலைக் கழக பாதுகாப்புக் குழு சார்பில், கடந்த மார்ச் 22-ம் தேதி மதுரை மூட்டா அரங்கில் நடைபெற்றது.

அந்த விசாரணையின் அடிப்படையில், வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சமூக ஆர்வலர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மூத்த பத்திரிகையாளர் டி.என்.கோபாலன் ஆகியோர் அடங்கிய பொது விசாரணைக்குழு அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது.

பொது விசாரணைக் குழுவினர் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு அமைப்பாளர் ஏ. சீனிவாசன், துணை அமைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் அந்த அறிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர். 17 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக, மதுரை காமராஜர் பல்கலை. தரம் தாழ்ந்து போயுள்ளது. மதுரை காமராஜர் பல்கலையின் துணைவேந்தராக உள்ள கல்யாணி மதிவாணன், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மருமகளாவார். இவரது தேர்வு பல்கலை. மானியக் குழுவின் ஒழுங்கு முறைகளுக்கு எதிரானது. கல்யாணி மதிவாணனின் தவறான செயல்பாட்டால், கடந்த 2 ஆண்டுகளாக நிர்வாகத்துக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களுக்குமான இடை வெளி அதிகரித்துக் கொண்டே போய் தற்போது பழிவாங் குதலாக மாறியுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது விசாரணைக் குழு தன் அறிக்கையில் 8 பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன் விவரம்: தமிழக ஆளுநர் பல்கலைக் கழகத்தின் வேந்தர் என்ற முறையில் மதுரை பல்கலைக் கழகத்தில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரிக்க பிற பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்களைக் கொண்ட உயர்நிலைக் குழுவை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு, துணைவேந்தர்களை தேர்ந் தெடுக்கும் முறையை மாற்றி அமைக்க வேண்டும்.

கல்யாணி மதிவாணனின் நியமனத்தை எதிர்த்து தொடுக்கப் பட்டு, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் உடனே விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x