Published : 20 Jun 2015 08:35 AM
Last Updated : 20 Jun 2015 08:35 AM

நடிகர் சங்கத் தேர்தலில் இருந்து விலக விஷால் அணி புது நிபந்தனை

நடிகர் சங்க இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக போடப்பட்ட பிரச்சி னைக்குரிய ஒப்பந்தத்தை ரத்து செய்தால் சங்கத் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என நடிகர் விஷால் தலைமையிலான அணி அறிவித் துள்ளது.

இது குறித்து நடிகர்கள் விஷால், நாசர், பொன்வண்ணன், கார்த்தி, கருணாஸ் ஆகியோர் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடக நடிகர்கள் இல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கம் இல்லை. நாடக நடிகர்களுக்கு முழுமையான அதிகாரமும், அங்கீகாரமும் அளிக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். ஆனால், நாடக நடிகர்களுக்கு எதிரானவர்களாக எங்களை காட்ட சூழ்ச்சி நடக்கிறது. மதுரையில் நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு கேட்கவே வந்துள்ளோம்.

சங்கத்துக்கு சொந்தமான இடத் தில் சத்தியம் நிறுவனம் திரை யங்க வணிக வளாகம் கட்ட ஒப் பந்தம் செய்யப்பட்டது. 3 ஆண்டு களாகியும் கட்டுமானம் முடிய வில்லை. சங்க உறுப்பினரே நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள் ளார். இவ்வளவு சிரமத்துக்கிடையே ஒப்பந்தத்தை தொடர வேண்டிய அவசியமில்லை. உடனே ஒப்பந் தத்தை ரத்து செய்துவிட்டு அனை வரும் இணைந்து ஒருமித்த கருத்து டன் புதிய முடிவை எடுப்போம்.

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பலர் சம்பளம் வாங்காமலேயே படத்தில் நடித்து நிதி வழங்கத் தயாராக உள்ளோம். இந்த நிதியில் இருந்து கட்டிடம் கட்டலாம். இப்படி ஏன் செய்யக்கூடாது எனக் கேட்டால், நேரடியாகப் பதில் தர மறுப்பதால் நிர்வாகிகளின் செயல்பாட்டில் சந்தேகம் எழுகிறது. இதனால் பல விஷயங்கள் குறித்து கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம். யாரை எந்த பதவிக்கு நிறுத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கவில்லை. வாக்குக்காக யாரும் பணம் வழங்கினால் கவலையில்லை. நாடக நடிகர்களுக்கு பணம் கிடைத்தால் மகிழ்ச்சிதான்.

பிரச்சினைக்குள்ளான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டால் தேர்தலில் போட்டியிட மாட்டோம். இரண்டாவது அணி இருக்கக்கூடாது என்பதே எங்களது ஆசை. நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோருடன் இப்பிரச்சினை குறித்து விவாதிக்கவில்லை.

சரத்குமார், ராதாரவி உட்பட பலர் கட்சி சார்பானவர்களே. நாங்கள் எந்தக் கட்சியிலும் இல்லை. சங்கத்தின் பிரச்சினையை நமக்குள் பேசி தீர்வு காணவே விரும்புகிறோம். இதற்காக அரசையோ, அரசியல்வாதிகள் உதவியையோ நாடுவது ஆரோக்கியமானதல்ல.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தேர்தலை புதன்கிழமை நடத்த உள்ளனர். நடிகர்கள் அனைவரும் வாக்களிக்க வந்துவிடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டே குறுகிய இடத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது என்றனர்.

பின்னர் இவர்கள் நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x