Last Updated : 14 Feb, 2017 10:22 AM

 

Published : 14 Feb 2017 10:22 AM
Last Updated : 14 Feb 2017 10:22 AM

பாகுபலி 2 பணிகள் நிறைவு: அடுத்த படப்பணிகளைத் தொடங்கினார் பிரபாஸ்

'பாகுபலி' படத்தின் பணிகள் மொத்தமாக முடிவுற்றதால், சூஜித் சைன் இயக்கும் படத்தில் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது.

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'பாகுபலி'. இதன் படப்பிடிப்பு பல ஆண்டுகள் நடைபெற்றதால், பிரபாஸ் வேறு எந்தொரு படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. தற்போது 'பாகுபலி தி கன்குளூஷன்' படப்பிடிப்பும் மொத்தமாக முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'பாகுபலி'யைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பூஜை நடைபெற்றது. UV கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தை சூஜித் சைன் இயக்கவுள்ளார்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படதுக்கு சங்கர்-இசான்-லாய் இசையமைக்க, மதி ஒளிப்பதிவை மேற்கொள்ளவுள்ளார். சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x