Published : 05 Jan 2016 05:38 PM
Last Updated : 05 Jan 2016 05:38 PM

சென்னை சர்வதேச பட விழா | ஐநாக்ஸ் 3| 6.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை ஐநாக்ஸ் 3 அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.15 மணி

Prince Dir.: Sam de Jong Netherlands|2015|78’

ஆம்ஸ்டர்டாம் நகரில் நிழலான காரியங்களில் ஈடுபடும் கூட்டத்தில் ஒருவன் இளைஞன் பிரின்ஸ். அவன் வாழ்க்கை எப்படி தவறான வழியில் செல்கிறதோ அதேபோலவே , தான் காதலிக்கும் பெண்ண அடைய அவன் தவறான பாதைக்கே செல்கிறான். அயூப் என்ற அந்தப் பெண் ஏற்கெனவே தவறான கூட்டத்தில் சிக்கியிருப்பவள். அயூப் பாதி நெதர்லாந்து பாதி மொராக்கா வம்சாவழியைச் சேர்ந்தவள். ஒரு கொள்ளைக்கூட்டத்தின் வயதான தலைவனிடம் மோகங்கொண்டு திரியும் அவளை தன்வழிக்குக் கொண்டுவர பிரின்ஸ் சகல வேலைகளிலும் ஈடுபடுகிறான்.