Last Updated : 18 Nov, 2014 11:17 AM

 

Published : 18 Nov 2014 11:17 AM
Last Updated : 18 Nov 2014 11:17 AM

தகவல் படிக்கப்பட்டதா என அறியமுடிவதால் பாதிப்பு: ‘வாட்ஸ் அப்’பின் ‘புளூ டிக்’ வசதிக்கு எதிர்ப்பு

பிரபல இணையதள வழி குறுந்த கவல் சேவை நிறுவனமான ‘வாட்ஸ் அப்’ புதிதாக அறிமுகப் படுத்தியுள்ள ‘புளூ டிக்’ வசதிக்கு வாடிக்கையாளர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

‘பேஸ்புக்’, ‘ட்விட்டர்’ சமூக வலைத்தளங்களுக்கு நிகராக, செல்போன் வாடிக்கையாளர் களிடம் ‘வாட்ஸ் அப்’ பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதில் ‘லாஸ்ட் ஸீன்’ என்ற வசதி அறி முகப்படுத்தப்பட்டபோது, தங்களுடைய தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படுவதாக வாடிக்கையா ளர்கள் புகார் கூறினார்கள். அதாவது, நீங்கள் கடைசியாக ‘வாட்ஸ் அப்’ தகவல் சேவையை எப்போது பயன்படுத்தினீர்கள் என உங்கள் செல்போன் எண்ணை அறிந்தவர்கள் தெரிந்து கொள்ள முடியும். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, ‘லாஸ்ட் ஸீன்’ வசதியை மறைக்க வகை செய்யும் புதிய வெர்ஷனை (உரு) ‘வாட்ஸ் அப்’ அறிமுகப்படுத் தியது.

இந்நிலையில் புதிய முயற்சி யாக, அந்நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ள ‘புளூ டிக்’ வசதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘வாட்ஸ் அப்’பில் நாம் அனுப்பிய தகவல், ஒருவரைச் சென்ற டைந்ததா என்பதனை அந்த தகவலின் இறுதியில் 2 ‘டிக் மார்க்’ தெரிவதை வைத்து உறுதி செய்துகொள்ளலாம். ஆனால், நமது தகவலை மறுமுனையில் இருப்பவர் படித்தாரா, இல்லையா என்பதை அறிவதற்கான வசதி கிடையாது.

அதனை நிவர்த்தி செய்யும் விதமாக, மறுமுனையில் இருப்ப வர் படித்துவிட்டார் என்பதை தகவல் அனுப்பியவர் அறியும் வகையில் அவரது குறுந்தகவல் அருகில் நீல நிறத்தில் இரு டிக் மார்க் தெரியும் வகையிலான வசதியை ‘வாட்ஸ் அப்’ சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. வாடிக்கை யாளர்களுக்கு கூடுதல் வசதி செய்துதரும் நோக்கில், இந்த வசதியை அந்நிறுவனம் அறிமுகப் படுத்தினாலும், அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தங்களது கோபத்தை ஏராளமா னோர் வெளிப்படுத்தி வருகின் றனர்.

இது குறித்து சென்னையை சேர்ந்த ஏ.பாலகண்ணன் கூறுகையில், “முன்பெல்லாம், நமது உயர் அதிகாரிகளோ அல்லது நெருங்கியவர்களோ ஒரு தகவலை அனுப்பி, அதை நாம் படித்துவிட்டு, அவசர வேலை காரணமாக பதில் சொல் லாமல் போனாலும் அது ஒரு பிரச்சி னையாக இருக்காது. ஆனால், இப்போது நாம் அந்த தகவலைப் பார்த்தோமா, இல்லையா என்பதனை தகவல் அனுப்பி யவர்கள் பார்த்து தெரிந்துகொள்ள முடிகிறது. இதனால் தேவையற்ற சச்சரவுகள், தவறான புரிதல்கள் ஏற்படுகின்றன” என்றார்.

லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள்

இதுபோல் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி யதால், அதற்கு தீர்வை அளிக்கும் முயற்சியில் ‘வாட்ஸ் அப்’ இறங்கியுள்ளது. அதனால், சோதனை முயற்சியாக தனது இணையதளத்தில் புதிய வெர்ஷனை (http://www.whatsapp.com/android/) அந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.

அதனை டவுன்லோடு செய்துகொண்டால், புளூ டிக் தொல்லையிலிருந்து விடுபடலாம். ஆனால், அது ‘கூகுள் பிளே ஸ்டோர்’-ல் வருவதற்கு மேலும் சில காலம் ஆகும் எனத் தெரிகிறது.

அதனால், உயர் அதிகாரி களிடமிருந்து தப்பிக்க நினைப் போர், விரைவாக செயல்பட்டு புதிய வெர்ஷனை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x